நாட்டை உலுக்கிய பெகாசஸ் ஒட்டுகேட்பு… வல்லுநர் குழு அமைக்க சுப்ரீம் கோர்ட் முடிவு!

 

நாட்டை உலுக்கிய பெகாசஸ் ஒட்டுகேட்பு… வல்லுநர் குழு அமைக்க சுப்ரீம் கோர்ட் முடிவு!

இந்தியாவிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், முன்னாள் தேர்தல் ஆணையர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என ஜனநாயகத்தின் குரலாய் ஒலிக்கும் பிரபலங்களின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டு கேட்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஸ்பைவேர் நிறுவனம் உருவாக்கிய சக்திவாய்ந்த பெகாசஸ் என்ற ஸ்பைவேர் உளவு பார்ப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த ஒட்டு கேட்பினால் யாருக்கு சாதகம் என்ற கேள்வி எழுந்தால், அது மத்திய அரசை நோக்கி கைகாட்டுகிறது.

நாட்டை உலுக்கிய பெகாசஸ் ஒட்டுகேட்பு… வல்லுநர் குழு அமைக்க சுப்ரீம் கோர்ட் முடிவு!

பெகாசஸை உருவாக்கிய என்எஸ்ஓ நிறுவனத்துக்கு பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த அரசுகளே வாடிக்கையாளர்களாக இருப்பதால், இந்தியாவில் ஒட்டு கேட்டது மத்திய அரசு தான் என எதிர்க்கட்சியினர் அடித்துச் சொல்கிறார்கள். இதனால் இரு வாரங்களுக்கும் மேலாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கி கிடந்தன. பத்திரிகையாளர்கள் இந்து ராம், சசிகுமார், சிபிஎம் எம்பி ஜான், வழக்கறிஞர் எம்.எல். சர்மா உள்ளிட்ட 9 பேர் உச்ச நீதிமன்றத்தில் பெகாசஸ் தொடர்பாக வழக்கு தொடர்ந்தனர்.

நாட்டை உலுக்கிய பெகாசஸ் ஒட்டுகேட்பு… வல்லுநர் குழு அமைக்க சுப்ரீம் கோர்ட் முடிவு!

சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்து உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் செயல்பட உத்தரவிடக் கோரி அவர்கள் தங்கள் மனுவில் தெரிவித்துள்ளனர். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதி சூர்யா கண்ட் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சூழலில் இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், “பெகாசஸ் மூலம் ஒட்டுக்கேட்ட விஷயத்தை மத்திய அரசு முற்றிலுமாக மறுக்கிறது.

நாட்டை உலுக்கிய பெகாசஸ் ஒட்டுகேட்பு… வல்லுநர் குழு அமைக்க சுப்ரீம் கோர்ட் முடிவு!

இவை வெறும் அனுமானங்கள் மட்டுமே. ஆதாரமற்ற ஊடக அறிக்கைகள், முழுமையற்ற, உறுதிப்படுத்தப்படாத தகவல்களை அடிப்படையாகக் கொண்டே இந்தக் குற்றச்சாட்டு மத்திய அரசு மீது சுமத்தப்படுகிறது. எங்கள் மீது தவறு இல்லாவிட்டாலும் இந்த விவகாரம் குறித்து முழுவதுமாக ஆராய துறை சார்ந்த நிபுணர்களை உள்ளடக்கிய குழு உருவாக்கப்படும். இந்தக் குழு பெகாசஸ் விவகாரத்தில் நிலவும் அனைத்து சந்தேகங்களையும் தீர்க்கும் வகையில் அமையும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

நாட்டை உலுக்கிய பெகாசஸ் ஒட்டுகேட்பு… வல்லுநர் குழு அமைக்க சுப்ரீம் கோர்ட் முடிவு!

இச்சூழலில் இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “பெகாசஸ் விவகாரத்தில் வல்லுநர்கள் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனு மீது அடுத்தவாரம் உத்தரவைப் பிறப்பிக்கிறோம். இந்த வாரமே உத்தரவுகளை பிறப்பிக்க நினைத்தோம். ஆனால், குழுவில் உள்ள சில உறுப்பினர்கள் தனிப்பட்ட காரணங்களால் வர இயலவில்லை. அடுத்தவாரம் இந்த வழக்கில் உத்தரவுகளைப் பிறப்பிக்கிறோம்” என மத்திய அரசை எதிர்த்து மனு தாக்கல் செய்த மனுதாரர்களிடம் தெரிவித்தனர்.