உத்தரகாண்டில் அதிர்ச்சி! 17 வயது சிறுமியிடம் பாலியல் தொடர்பில் இருந்த 19 இளைஞர்களுக்கு எய்ட்ஸ்
Oct 31, 2024, 17:26 IST1730375803512
உத்தரகாண்டில் 17 வயது சிறுமியிடம் பாலியல் தொடர்பில் இருந்த 19 இளைஞர்களுக்கு ஹெச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் நைனிடாலில் 17 வயது சிறுமியுடன் உடலுறவில் ஈடுபட்ட 19க்கும் மேற்பட்ட இளைஞர்கள் எச்ஐவி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹெரோயின் போதைக்கு அடிமையாகியதாகக் கூறப்படும் சிறுமி, தனக்கு போதைப்பொருள் வாங்க நிதியளித்த இளைஞர்களுடன் உடல் உறவில் ஈடுபட்டுள்ளார். தொடர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டால் இளைஞருக்கு எடுக்கப்பட்ட இரத்தப் பரிசோதனையில் அவருக்கு ஹெச்.ஐ.வி. உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து நடந்த விசாரணையில் அச்சிறுமி மூலம் பலருக்கும் தொற்று பரவியிருப்பது தெரியவந்துள்ளது.