ஒரே பொது சிவில் சட்டம் தேவை: பிரதமர் மோடி

 
'One nation, one secular civil code'; PM Modi’s announcement in Gujarat

குஜராத் மாநிலம் கெவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலையில் இன்று நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டு தின கொண்டாட்டங்களில் பிரதமர் திரு  நரேந்திர மோடி பங்கேற்றார்.   சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு  பிரதமர் அவருக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31-ம் தேதி கொண்டாடப்படும் தேசிய ஒருமைப்பாட்டு தினத்தையொட்டி நடைபெற்ற  ஒருமைப்பாட்டு தின அணிவகுப்பையும் மோடி  பார்வையிட்டார்.

Govt is trying to put in place 'one nation, one secular civil code': PM Modi  in Gujarat – India TV

"சர்தார் சாஹிபின் சக்திவாய்ந்த வார்த்தைகள்... ஒற்றுமையின் சிலை அருகே இந்த நிகழ்ச்சி... ஏக்தா நகரின் இந்த பரந்த காட்சி... இங்கு நடந்த அற்புதமான நிகழ்ச்சிகள்... இந்த மினி இந்தியாவின் பார்வை... எல்லாமே மிகவும் அருமை... இது ஊக்கமளிக்கிறது. தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு நாட்டுமக்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர், ஆகஸ்ட் 15 மற்றும் ஜனவரி 26 தேதிகளைப் போலவே, அக்டோபர் 31 ஆம் தேதி நடைபெறும் இந்த நிகழ்ச்சி நாடு முழுவதும் புதிய சக்தியை நிரப்புகிறது என்று கூறினார்.

தீபாவளியை  முன்னிட்டு, நாட்டிலும், உலகிலும் வாழும்  இந்தியர்கள் அனைவருக்கும் பிரதமர்  வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த முறை தேசிய ஒற்றுமை தினம், தீபாவளி பண்டிகையுடன் வந்துள்ளது. இந்த ஒற்றுமை ஓர் அற்புதமான தற்செயலான நிகழ்வைக் கொண்டு வந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். "தீபாவளி, விளக்குகளின் வாயிலாக, நாடு முழுவதையும் இணைக்கிறது, நாடு முழுவதையும் ஒளிரச் செய்கிறது. தற்போது தீபாவளிப் பண்டிகை இந்தியாவை உலகத்துடன் இணைக்கிறது" என்று அவர் மேலும் கூறினார்.

சர்தார் படேலின் 150-வது பிறந்த ஆண்டு இன்று தொடங்குவதால், இந்த ஆண்டு ஒற்றுமை தினம் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்பதைப் பிரதமர் சுட்டிக்காட்டினார். அடுத்த 2 ஆண்டுகளுக்கு சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்தியாவுக்கு அவர் அளித்த அசாதாரண பங்களிப்புக்கு நாடு செலுத்தும் அஞ்சலி இதுவாகும். இந்த இரண்டு ஆண்டு  கொண்டாட்டம் ஒரே இந்தியா, உன்னத இந்தியா என்ற நமது தீர்மானத்தை வலுப்படுத்தும் என்று பிரதமர் கூறினார். சாத்தியமற்றதாகத் தோன்றுவதைக் கூட சாத்தியமாக்க முடியும் என்பதை இந்த நிகழ்ச்சி நமக்குக் கற்பிக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

PM Modi's big announcement on Diwali: 'One Nation One Election, UCC to  become a reality soon' - BusinessToday

சத்ரபதி சிவாஜி மகராஜ் எவ்வாறு அனைவரையும் ஒருங்கிணைத்து ஆக்கிரமிப்பாளர்களை விரட்டினார் என்பதை திரு மோடி அடிக்கோடிட்டுக் காட்டினார். மகாராஷ்டிராவின் ராய்கட் கோட்டை அந்தக் கதையை இன்றும் சொல்கிறது. ராய்கட் கோட்டை சமூக நீதி, தேசபக்தி, தேசம் முதன்மை என்ற மதிப்புகளின் புனித பூமியாக உள்ளது என்று அவர் கூறினார். "சத்ரபதி சிவாஜி மகராஜ் ராய்கட் கோட்டையில் தேசத்தின் பல்வேறு கருத்துகளை ஒரு நோக்கத்திற்காக ஒன்றிணைத்தார். இன்று இங்கே ஏக்தா நகரில், வரலாற்றுச் சிறப்புமிக்க ராய்கட் கோட்டையின் உருவத்தை நாம் காண்கிறோம். இன்று, இந்தப் பின்னணியில், வளர்ச்சியடைந்த இந்தியாவின் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக நாம் இங்கு ஒன்றுபட்டுள்ளோம்" என்று பிரதமர் தெரிவித்தார்.

கடந்த பத்தாண்டுகளில் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும்  வலுப்படுத்துவதில் இந்தியா எவ்வாறு குறிப்பிடத்தக்க சாதனைகளை கண்டுள்ளது என்பதை பிரதமர் திரு. நரேந்திர மோடி எடுத்துரைத்தார். இந்த உறுதிப்பாடு அரசின் பல்வேறு முன்முயற்சிகளில் தெளிவாகத் தெரிகிறது. இதற்கு ஏக்தா நகரும் ஒற்றுமை சிலையும் எடுத்துக்காட்டு. இந்த நினைவுச்சின்னம் பெயரில் மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள கிராமங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட இரும்பாலும் மண்ணாலும் கட்டப்பட்டுள்ளதால் அதன் கட்டுமானத்திலும் ஒற்றுமையை குறிக்கிறது. ஏக்தா நகரில்  ஏக்தா நர்சரி, ஒவ்வொரு கண்டத்தைச் சேர்ந்த தாவரங்களுடன் கூடிய விஸ்வ வனம், இந்தியா முழுவதிலும் இருந்து ஆரோக்கியமான உணவுகளை ஊக்குவிக்கும் குழந்தைகள் ஊட்டச்சத்து பூங்கா, பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயுர்வேதத்தை எடுத்துரைக்கும் ஆரோக்கிய வனம், நாடு முழுவதிலுமிருந்து வரும் கைவினைப் பொருட்கள் ஒன்றாக காட்சிப்படுத்தப்படும் ஏக்தா மால் ஆகியவை உள்ளதைப்  பிரதமர் சுட்டிக்காட்டினார்.

 உண்மையான ஓர் இந்தியர் என்ற முறையில் , நாட்டின் ஒற்றுமைக்கான ஒவ்வொரு முயற்சியையும் கொண்டாடுவது நம் அனைவரின் கடமை என்று பிரதமர் அறிவுறுத்தினார். மராத்தி, பெங்காலி, அசாமி, பாலி,  பிராகிருத மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்குவது உட்பட புதிய தேசிய கல்விக் கொள்கையின் கீழ் இந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவது வரவேற்கப்பட்டுள்ளது; தேச ஒற்றுமையை வலுப்படுத்துகிறது என்பதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கில் ரயில் நெட்வொர்க்குகளை விரிவுபடுத்துதல், லட்சத்தீவு மற்றும் அந்தமான்-நிக்கோபாருக்கு அதிவேக இணைய அணுகல், மலைப்பகுதிகளில் மொபைல் நெட்வொர்க்குகள் போன்ற இணைப்பு திட்டங்கள் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பிளவுகளை இணைக்கின்றன. இந்த நவீன உள்கட்டமைப்பு எந்தவொரு பிராந்தியமும் பின்தங்கியதாக உணராமல் இருப்பதை உறுதி செய்து, இந்தியா முழுவதும் ஒற்றுமையின் வலுவான உணர்வை வளர்க்கிறது என்று அவர் கூறினார்.

One Nation, One Election To Become Reality Soon, Article 370 Buried  Forever': PM Modi On Unity Day In Gujarat

வேற்றுமையில் ஒற்றுமையுடன் வாழ்வதற்கான நமது திறன் தொடர்ந்து சோதிக்கப்படும் என்று மகாத்மா காந்தி கூறுவார் . என்ன விலை கொடுத்தாவது இந்த சோதனையில் நாம் தொடர்ந்து தேர்ச்சி பெற வேண்டும் என்பதைப்  பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார். கடந்த 10 ஆண்டுகளில், வேற்றுமையில் ஒற்றுமையுடன் வாழ்வதற்கான அனைத்து முயற்சிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது என்று திரு மோடி கூறினார். அரசு தனது கொள்கைகள் மற்றும் முடிவுகளில் ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உணர்வை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. ஆதார் மூலம் "ஒரே நாடு, ஒரே அடையாளம்",  ஜிஎஸ்டி மற்றும் தேசிய குடும்ப அட்டை  போன்ற "ஒரே தேசம்" மாதிரிகளை நிறுவுவதற்கான கூடுதல் முயற்சிகள் உள்ளிட்ட அரசின் பிற முயற்சிகளை பிரதமர் பாராட்டினார். இது அனைத்து மாநிலங்களையும் ஒரே கட்டமைப்பின் கீழ் இணைக்கும் ஒருங்கிணைந்த நடைமுறையை உருவாக்குகிறது. ஒற்றுமைக்கான எங்களது முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே தேசம், ஒரே சிவில் சட்டம், அதாவது மதச்சார்பற்ற சிவில் சட்டத்தை உருவாக்க நாங்கள் தற்போது பணியாற்றி வருகிறோம்" என்று பிரதமர் மேலும் கூறினார்.

பத்தாண்டு கால ஆட்சியைப் பிரதிபலிக்கும் விதத்தில், ஜம்மு-காஷ்மீரில் 370 வது பிரிவு நீக்கப்பட்டதை ஒரு மைல்கல்லாக குறிப்பிட்ட பிரதமர், "முதல்முறையாக, ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் இந்திய அரசியலமைப்பின் கீழ் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்," இது இந்தியாவின் ஒற்றுமைக்கான ஒரு முக்கிய மைல்கல் என்றார். பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதத்தை நிராகரித்ததற்காகவும், இந்திய அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் பக்கம் நிற்பதற்காகவும் ஜம்மு காஷ்மீர் மக்களின் தேசபக்தி உணர்வை அவர் பாராட்டினார்.

தேசப் பாதுகாப்பு மற்றும் சமூக நல்லிணக்கத்தை நிலைநிறுத்த எடுக்கப்பட்ட இதர நடவடிக்கைகளையும் விவரித்த பிரதமர், வடகிழக்கில் நீண்டகாலமாக நிலவி வரும் மோதல்களைத் தீர்ப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைக் குறிப்பிட்டார். போடோ ஒப்பந்தம் அசாமில் 50 ஆண்டுகால மோதலை எவ்வாறு முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது என்பதையும், புரு-ரியாங் ஒப்பந்தம் ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த நபர்களை வீடு திரும்ப அனுமதித்தது என்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். நக்சலிசத்தின் செல்வாக்கைக் குறைப்பதில் பெற்றுள்ள  வெற்றியை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.  தொடர்ச்சியான முயற்சிகள் காரணமாக, நக்சலிசம் இப்போது அதன் இறுதி மூச்சை விடுகிறது என்றார்.

PM Modi's UCC Pitch On Unity Day: 'India Moving Towards One Nation, One  Secular Civil Code'

இன்றைய இந்தியா தொலைநோக்கு, வழிகாட்டல்  மற்றும் உறுதியைக் கொண்டுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். வலிமையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இந்தியா,  உணர்திறன் மற்றும் எச்சரிக்கை உணர்வைக் கொண்டது.  இது எளிமையாகவும், வளர்ச்சிப் பாதையிலும் செல்கிறது. இது வலிமை, அமைதி ஆகிய இரண்டின் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்கிறது. உலகளாவிய அமைதியின்மைக்கு மத்தியில் இந்தியாவின் விரைவான வளர்ச்சியைப் பாராட்டிய பிரதமர், வலிமையைத் தக்க வைத்துக் கொண்டு இந்தியாவை அமைதியின் கலங்கரை விளக்கமாக வர்ணித்தார். உலகின் பல்வேறு பகுதிகளில் நிலவும் மோதல்களுக்கு மத்தியில், "இந்தியா உலகளாவிய நண்பனாக உருவெடுத்துள்ளது" என்று அவர் கூறினார். ஒற்றுமை மற்றும் விழிப்புணர்வின் முக்கியத்துவத்தையும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார், சில சக்திகள் இந்தியாவின் முன்னேற்றத்தால் கலக்கமடைந்துள்ளன. இந்தியாவின் பொருளாதார நலன்களுக்கு தீங்கு விளைவிப்பதையும் பிளவுகளை விதைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன என்று கூறினார். இத்தகைய பிளவுபடுத்தும் சக்திகளை இந்தியர்கள் நிராகரித்து தேசிய ஒற்றுமையைப் பாதுகாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

பிரதமர் தனது உரையை நிறைவு செய்தபோது, சர்தார் படேலை மேற்கோள் காட்டி, தேசம் ஒற்றுமையில் உறுதியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். "இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதன் மூலம் மட்டுமே ஒற்றுமையை வலுப்படுத்த முடியும். "அடுத்த 25 ஆண்டுகள் ஒற்றுமையைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமானது. எனவே, ஒற்றுமை என்ற இந்த மந்திரத்தை நாம் பலவீனப்படுத்தக் கூடாது. விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு இது அவசியம். சமூக நல்லிணக்கத்திற்கு இது அவசியம். உண்மையான சமூக நீதிக்கும், வேலைவாய்ப்புக்கும், முதலீடுகளுக்கும் இது அவசியம். இந்தியாவின் சமூக நல்லிணக்கம், பொருளாதார வளர்ச்சி, ஒற்றுமைக்கான உறுதிப்பாடு ஆகியவற்றை வலுப்படுத்த ஒவ்வொரு குடிமகனும் இணைய வேண்டும்"  என்று பிரதமர் அழைப்பு விடுத்தார்.