ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா...இன்று முதல் ஆலோசனை கூட்டம்!

 
election

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தொடர்பாக, முதல் ஆலோசனை கூட்டத்தை நாடாளுமன்ற கூட்டுக்குழு இன்று நடத்துகிறது.

’ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்ட அமலுக்கான இரு மசோதாக்களும் மக்களவையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்டது. ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் மக்களவையில் தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை கூட்டுக்குழுவுக்கு அனுப்ப மக்களவையில் அதிகம் பேர் ஆதரவு தெரிவித்ததை அடுத்து, மசோதா கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தொடர்பாக, முதல் ஆலோசனை கூட்டத்தை நாடாளுமன்ற கூட்டுக்குழு இன்று நடத்துகிறது. சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் அதிகாரிகள், மசோதாவின் விதிகள் குறித்து கூட்டுக்குழுவுக்கு விளக்கமளிப்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, நாடாளுமன்ற இரு அவையிலும் அமளியில் ஈடுபட்டனர்.