ஒரே நாடு ஒரே தேர்தல் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

 
அக்

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குழு ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆய்வு மேற்கொண்டது. ராம்நாத் கோவிந்த் குழுவின் பரிந்துரைகளுக்கு மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதையடுத்து எதிர்வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

மசோதா தாக்கலானவுடன் ஒரே நேரத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.