டென்னிஸ் வீராங்கனை ஹிமானி மோரை மணந்தார் ஒலிம்பிக் வீரர் நீரஜ் சோப்ரா

 
neeraj

ஒலிம்பிக் வீரர் நீரஜ் சோப்ரா, டென்னிஸ் வீராங்கனை ஹிமானி மோரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து தமது எக்ஸ் தளத்தில் நீரஜ் சோப்ரா தகவல் தெரிவித்துள்ளார். டென்னிஸ் வீராங்கனை ஹிமானி மோரை திருமணம் செய்து கொண்டுள்ளதாக அவர் வெளியிட்ட தகவல் ஒவ்வொருவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஹிமானி மோர் இந்தியாவின் சிறந்த, பிரபல டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவராவார். தனிப்பட்ட குடும்ப விழாவில் நீரஜ் சோப்ரா, ஹிமானியை கரம் பிடித்தார்.neeraj

நீரஜ் சோப்ராவுடன் திருமணம் நடைபெற்றதை ஒட்டி ஹிமானியும் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்துள்ளார். டென்னிஸ் வீராங்கனை என்பது மட்டுமின்றி விளையாட்டு நிர்வாகத்தில் நிபுணத்துவம் பெற்றவரும் கூட. ஹரியானா மாநிலத்தின் லார்சௌலி பகுதியை சேர்ந்த இவர், பானிபட்டில் உள்ள லில்டில் ஏன்ஜெல்ஸ் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். டெல்லி பல்கலைக்கழகத்தின் மிராண்டா ஹவுசில் விளையாட்டு கல்வி, அரசியல் அறிவியலில் இள நிலை பட்டம் பெற்றுள்ளார். மேற்படிப்புக்காக அவர் வெளிநாட்டுக்கு சென்றார்.

இப்போது அவர், மெக்கார்மேக் ஐசன்பெர்க் மேலாண்மை கல்வி நிறுவனத்தில் விளையாட்டு மேலாண்மை நிர்வாகம் மற்றும் அறிவியலில் பட்டமேற்படிப்பு படிக்கிறார். தென்கிழக்கு லூசானியா பல்கலைக்கழகத்திலும் அவர் படித்துள்ளார். கல்வி தவிர, ஹிமானி ஒரு சிறந்த டென்னிஸ் வீரர் ஆவார். தமது வீட்டின் மொட்டை மாடியில் டென்னிஸ் விளையாட பயிற்சி பெற்ற அவர், பின்னர் பல்வேறு தேசிய, சர்வதேச விளையாட்டு போட்டிகளில் விளையாடி விருதுகள் பெற்றுள்ளார்.டென்னிஸ் வீராங்கனையாக, பிராங்க்ளின் பியர்ஸ் பல்கலைக்கழகத்தில் பகுதி நேர உதவி பயிற்சியாளராக பணிபுரிகிறார். பட்டப்படிப்பு உதவியாளராக இருந்தபோது ஆம்ஹெர்ஸ்ட் கல்லூரியில் டென்னிஸ் டீம் ஒன்றையும் நிர்வகித்து வந்தார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் பெற்ற நீரஜ் சோப்ரா தம்முடைய திருமணம் குறித்து வெளியிட்ட எக்ஸ் பதிவில், "என்னுடைய குடும்பத்தில், என்னுடைய வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி உள்ளேன். அன்பினால் பிணைக்கப்பட்டு, மகிழ்ச்சியுடன் என்றென்றும் திகழ இந்த தருணத்தில் எங்களை ஒன்று சேர்த்த ஒவ்வொருவரின் ஆசீர்வாதத்திற்கும் நன்றி,"என்று கூறினார்.

நீரஜ் சோப்ரா தமது திருமணம் குறித்த தகவலை மிகவும் ரகசியமாக வைத்திருந்தார். பாரீஸ் நகரில் ஒலிம்பிக்கில் இரண்டாவதாக ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்ற சில மாதங்கள் கழித்து நீரஜ் சோப்ரா திருமணம் செய்து கொண்டுள்ளார். ஒலிம்பிக்கில் 2021ஆம் ஆண்டு முதன் முதலாக தனிநபர் தங்க பதக்கத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை நீரஜ் பெற்றார்.