இந்த ரயில்களில் இனி அசைவ உணவுகள் கிடைக்காது -ஐஆர்சிடிசி

 
eக்ஷ்

அசைவ உணவின் வாசனையால் இந்த கடைகளை கடந்து செல்லும் பெரும்பாலான மக்கள் வெறுப்பு உணர்வு அடைகிறார்கள்.  அதுமட்டுமல்லாமல் கோழி, முட்டைகளை காட்சிப்படுத்துவது மத உணர்வுகளை புண்படுத்துகிறது.  அதனால் இறைச்சி உணவுகளை கடைகளில் காட்சிப்படுத்த தடை விதிக்கப்படுகிறது.  இந்த நடைமுறையை 15 நாட்களுக்குள் கடை உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டும்.  இல்லை என்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று குஜராத் மாநிலத்திற்கு உட்பட்ட வதோதரா,  ராஜ்கோட் மாநகராட்சி மேயர்கள் உத்தரவை வெளியிட்டுள்ளனர்.

 பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் இப்படிப்பட்ட உத்தரவால் பலரும் அதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.   ஏன் தனிநபர் உணவு விஷயத்தில் தலையிட கிறீர்கள் என்று பாஜகவுக்கு எதிராக சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  இந்த நிலையில் ரயில்களில் இனி அசைவ உணவு கிடைக்காது சைவ உணவு மட்டுமே கிடைக்கும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இர்

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேசன்  சில ரயில்களில் சைவ உணவு மட்டுமே வழங்க இருப்பதாகவும், அசைவ உணவுக்கு தடை விதிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

சில ரயில்களில் என்றால்,  மத வழிபாட்டு தலங்களை இணைக்கும் வழித்தடங்களில் செல்லும் ரயில்களில் இந்த நடைமுறையை கொண்டு வர திட்டமிடப்பட்டிருக்கிறது.  இனிமேல் மத வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் ரயில்களில்  சைவை உணவு மட்டுமே கிடைக்கும் என்ற நிலை இருக்கிறது.

தற்போது, டெல்லியில் இருந்து கத்ராவிற்கு இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் அசைவ உணவு இனி கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  அந்த ரயிலில் உணவு பரிமாறும் பணியாளர்களும் அசைவை உணவை கையாளமாட்டார்கள் என்றும், சமையலறையில் சைவ பொருட்களை தவிர வேறு பொருட்கள் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஐஆர்சிடிசியின் இந்த முடிவு அசைவை பிரியர்களுக்கு கடும் அதிர்ச்சியை தந்திருக்கிறது.