"டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிப்பதில்லை" - எஸ்பிஐ விளக்கம்!

 
sbi

அடிப்படை சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு  டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டண விலக்கு அளிப்பதாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா  தெரிவித்துள்ளது.

பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் விபத்து காப்பீடு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் மத்திய அரசினால் வழங்கப்பட்டு வருகிறது. ஜன்தன் வங்கி கணக்கு வாடிக்கையாளருக்கு சலுகை  வழங்கும் விதமாக டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டண விலக்கு அளிக்கப்படுவதாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. அதாவது அடிப்படை சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களிடமிருந்து மாதம் நான்கு முறைக்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்தால் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது.  கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் இந்த கட்டணம்  வசூல் செய்யப்பட்டு வந்த நிலையில் இந்த கட்டணத்தை ரத்து செய்வதாகவும் அறிவித்தது.  அத்துடன் ஏற்கனவே வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூல் செய்த தொகையை திருப்பி வழங்கியுள்ளதாகவும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. 

ttn

இதுவரையில் ரூ.90 கோடியை திருப்பி வழங்கி விட்டதாகவும்,  இன்னும் ரூ.164 கோடி பாக்கி உள்ளதாகவும் ஸ்டேட் பாங்க் ஆஃப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதே சமயம் தொடர்ந்து வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலித்து வருவதாக தகவல் வெளியான நிலையில்,  அதை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.  அத்துடன் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் அடிப்படை சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களிடம் டிஜிட்டல்  பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிப்பது இல்லை எனவும்  கூறியுள்ளது.

sbi

ஜன் தன் வங்கி கணக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து ஒவ்வொரு பரிமாற்றத்திற்கும் ரூபாய் 17.70 கட்டணம் விதித்துள்ளது என்றும் இதன் மூலம் 254 கோடியை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வசூலித்துள்ளது என்று மும்பை ஐஐடி கல்வி நிறுவனம் சமீபத்தில் ஆய்வறிக்கை ஒன்று நடத்தி செய்தி வெளியிட்டிருந்தது.  ஆனால் அடிப்படை சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்களிடம் முதல் நான்கு பரிமாற்றத்துக்கு பின்பு கட்டணம் விதிக்கும் முறை 2016ஆம் ஆண்டு தொடங்கப் பட்டதாகும்.  அதன்பிறகு கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவின் அடிப்படையில்,  90 கோடி திருப்பி வாடிக்கையாளர்களிடமே வழங்கப்பட்டு விட்டதாகவும்,  டிஜிட்டல் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் டிஜிட்டல் பரிமாற்றம் பரிமாற்றத்திற்கு கட்டணம் விதிக்கப்படுவது இல்லை என்றும் 4 முறைக்கு மேல் பணத்தை ஏடிஎம்களில் இருந்து எடுப்பதற்கு மட்டுமே கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்துள்ளது.