பாப்கார்னுக்கு 18% வரி! பழைய கார்களின் விற்பனை வரி உயர்வு- நிர்மலா சீதாராமன்
பேக்கேஜ் செய்யப்படாத பாப்கார்னுக்கு 5%, பேக்கேஜ் செய்யப்பட்ட பாப்கார்னுக்கு 12%, கேரமல் வகை பாப்கார்னுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “வங்கி கடன் பெற்றவர்கள் விதிமுறைகளை பூர்த்தி செய்யாததன் மூலம் விதிக்கப்படும் அபராதத்தின் மீது எந்த ஜிஎஸ்டி வரியும் இல்லை. சுகாதாரம், ஆயுள் காப்பீடு பிரிமியம் மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி குறைப்பது முடிவு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இனி பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட எலக்ட்ரிக் வாகனங்கள், பெட்ரோல் வாகனங்கள், டீசல் வாகனங்களின் விற்பனை மீதான ஜிஎஸ்டி வரி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது,பழைய கார்களுக்கான ஜிஎஸ்டி 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பாப்கார்ன்க்கு 18 % வரை ஜிஎஸ்டி வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உப்பு போடப்பட்ட பாப்கார்ன் மற்றும் இனிப்பு போடப்பட்ட கேரமல் பாப்கார்ன் மற்றும் பிளைன் பாப்கார்ன் ஆகிய மூன்றும் பல்வேறு மாநிலங்களில் கார வகை என்ற பிரிவுகளில் விற்பனை செய்யப்படுகிறது. கேரமல் பாப்கானில் இனிப்பு சேர்க்கப்படுவதால் அது உப்பு பாப்கானிலிருந்து தனியாக கருதப்படுகிறது. விவசாயிகள் பச்சை மிளகு, காய்ந்த மிளகு, உலர் திராட்சைகளை விற்பனை செய்யும் போது எந்தவிதமான ஜிஎஸ்டி வரியும் இல்லை. வியாபாரிகள் வாங்கி விற்பனை செய்யும்போது அவற்றுக்கு வரி உண்டு. தமிழகத்தில் வாடகை கடைகளுக்கான 18% ஜிஎஸ்டி வரி ரத்து செய்யப்படுகிறது. செறிவூட்டப்பட்ட அரிசி மீதான ஜிஎஸ்டி வரி 12%-ல் இருந்து 5%ஆக வரி குறைக்கப்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் ஜீன் தெரப்பிக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விமான எரிபொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர மாநிலங்கள் ஒப்புக்கொள்ளவில்லை” என்றார்.