எனது தந்தைக்கும், மகாத்மா காந்திக்கும் கடினமான உறவு இருந்தது... நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மகள் தகவல்

 
காந்தி, நேதாஜி

எனது தந்தைக்கும், மகாத்மா காந்திக்கும் கடினமான உறவு இருந்தது என்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மகள் அனிதா போஸ் தெரிவித்தார்.
 
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கடந்த சில தினங்களுக்கு முன், மகாத்மா காந்தியும், ஜவஹர்லால் நேருவும் நேதாஜியை ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்க தயாராக இருந்தனர் என்ற பழைய செய்தி  ஒன்றை வெளியிட்டு இருந்தார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், எனது தந்தைக்கும், மகாத்மா காந்திக்கும் கடினமான உறவு இருந்தது என்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மகள் அனிதா போஸ் தெரிவித்துள்ளார். 

‘பெண்களிடம் தகாத முறையில் பேசுகிறார்’: கரண் ஜோகர் குறித்து கங்கனா

நேதாஜி சுபாஸ் சந்திரபோஷின் மகள் அனிதா போஸ் முன்னணி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு  பேட்டியளித்தார். அப்போது கங்கனா ரணாவத்தின் கருத்து குறித்த கேள்விக்கு அவர் பதில் கூறியதாவது: எனது தந்தைக்கும், மகாத்மா காந்திக்கும் கடினமான உறவு இருந்தது. ஏனெனில் காந்தியால் நேதாஜியை கட்டுப்படுத்த முடியவில்லை. அதேசமயம் என் தந்தை காந்தியின் சிறந்த அபிமானி. அவர்கள் இருவரும் (நேதாஜி, காந்தி) இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடிய மாபெரும் ஹீரோக்கள். ஒருவர் இல்லாமல் மற்றொருவர் செய்திருக்க முடியாது. இது ஒரு கலவையாக இருந்தது. 

அனிதா போஸ்

இந்தியாவின் சுதந்திரத்திற்கு வன்முறையற்ற கொள்கை மட்டுமே காரணம் என்று சில காங்கிரஸ் தலைவர்கள் நீண்ட காலமாக கூற முயன்றது போல் இல்லை. நேதாஜி மற்றும் இந்திய தேசிய ராணுவம் (ஐ.என்.ஏ.) நடவடிக்கைகளும் இந்தியாவின் சுதந்திரத்துக்கு பங்களித்தன என்பதை நாம் அனைவரும் அறிவோம். மறுபுறம், நேதாஜியும், ஐ.என்.ஏ.வும் மட்டுமே இந்தியாவின் சுதந்திரத்தை கொண்டு வந்தனர் என்று கூறுவது முட்டாள்தனமானது. நேதாஜி உள்பட பலரை காங்கி ஊக்கப்படுத்தினார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.