மோதவந்த ரயில்! நூலிழையில் உயிர் தப்பிய முதல்வர்
முதல்வர் சந்திரபாபு விஜயவாடா ரயில்வே பாலத்தில் நின்று ஆய்வு செய்து கொண்டிருந்தபோது திடீரென ரயில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு விஜயவாடா மதுராநகர் பகுதியில் வெள்ளநீரை ஆய்வு செய்து கொண்டிருந்தார். கீழே இறந்து சரியாக தெரியாததால் சந்திரபாபு மற்றும் அதிகாரிகள் ரயில்வே பாலத்தில் ஏறி சென்று ஆய்வு செய்து கொண்டிருந்தபோது திடீரென ரயில் தண்டவாளத்தில் ரயில் வந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக சந்திரபாபு மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரிகள் ரயில் செல்லும் வரை ரயில் பாலத்தின் ஓரத்தில் அப்படியே நின்று கொண்டனர்.
மழை வெள்ள பாதிப்பை ஆய்வு செய்யும் போது ரயில்வே பாலத்தில் ஏறிய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு.. அந்நேரத்தில் ரயில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது#SunNews | #AndhraFloods | #ChandrababuNaidu pic.twitter.com/7Lsk2VGb5j
— Sun News (@sunnewstamil) September 5, 2024
ரயில் செல்லும் நேரத்தை அதிகாரிகள் தெரிந்து கொள்ளாமல் முதல்வரை ரயில்வே தண்டவாளத்தில் அனுமதித்தது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் தெலுங்கு தேசம் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். சிறிது நேரத்தில் ஆபத்து தவிர்க்கப்பட்டதால் அனைவரும் நிம்மதி அடைந்தனர். இதனால் சற்று நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது