கட்டுக்குள் வந்த கொரோனா… வெளியில் தலைக்காட்டிய மோடி!

 

கட்டுக்குள் வந்த கொரோனா… வெளியில் தலைக்காட்டிய மோடி!

இன்று தடுப்பூசி செலுத்தப்படுவோர் எண்ணிக்கை புதிய சாதனை படைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

கட்டுக்குள் வந்த கொரோனா… வெளியில் தலைக்காட்டிய மோடி!

இந்தியாவில் கொரோனா பரவல் படிப்படியாக கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 53,256 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு 2,99,35,221 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் நாடு முழுவதும் ஒரே நாளில் 1422 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்த நிலையில், கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,88,135 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே இன்று முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச தடுப்பூசி என்ற மத்திய அரசின் திருத்தப்பட்ட தடுப்பூசி கொள்கை அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனாவை எதிர்த்து போராட தடுப்பூசியே வலிமையான ஆயுதம். கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் இன்று இந்தியா படைத்துள்ள சாதனை மகிழ்ச்சியளிக்கிறது. தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும், அனைத்து குடிமக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய கடுமையாக போராடும் முன்களப் பணியாளர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.