“ஆண்களோடு அரட்டையடிக்க போன் கேக்கல , ஆன்லைன் க்ளாஸுக்குத்தானே கேக்குறேன் ” -மறுத்த தந்தையால் மனம் வெறுத்து தற்கொலை செய்து கொண்ட மாணவி .

“ஆண்களோடு அரட்டையடிக்க போன் கேக்கல , ஆன்லைன் க்ளாஸுக்குத்தானே கேக்குறேன் ”  -மறுத்த தந்தையால் மனம் வெறுத்து தற்கொலை செய்து கொண்ட மாணவி .

எந்நேரமும் கேம் விளையாடவும் ,கண்ட படம் பார்க்கவும் ,கடலை போடவும் ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் பணக்கார வீட்டு பிள்ளைகள் மத்தியில் ஒரு ஏழை வீட்டு பெண் ஆன்லைனில் படிக்க ஸ்மார்ட் போன் இல்லாத ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டார் .

மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மைனர் சிறுமி 12ம் வகுப்பு படிக்கிறார் .இப்போது பரவும் கொரானாவால் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ள நிலையில், வகுப்புகள் ஆன்லைனில் எடுக்கிறார்கள் .இதனால் அவரோடு படிக்கும் அனைத்து தோழிகளும் ஸ்மார்ட் போன் மூலம் கல்வி கற்று வருகிறார்கள் .இந்நிலையில் அந்த பெண், கூலி தொழிலாளியான அவரின் தந்தையிடம் ஸ்மார்ட் போன் கேட்டுள்ளார் .
ஒரு சாதாரண கூலித்தொழிலாளியான அவரால் இப்போது பணமில்லாததால் பிறகு வாங்கி தருகிறேன் என்று கூறியுள்ளார் .ஆனால் படிப்பின் மீது தீரா காதல் கொண்ட அந்த மாணவியால் போன் இல்லாமல் படிக்க முடியவில்லையே என்று ஏங்கினார் .இதனால் அவரின் தாய் சஷி யுவனாட்டியிடம் அவர் சென்று ஸ்மார்ட் போன் கேட்டு சண்டை போட்டார் .ஆனால் அவரும் கொஞ்சநாள் பொறுத்திருக்க சொன்னார் .ஆனால் அதற்குள் கடந்த வியாழக்கிழமையன்று அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் .அவர் விஷம் குடித்த விஷயத்தை அவரின் இளைய மகள் அவரின் அம்மாவிடம் கூறியதும் ,அவரை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றார்கள் .ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்தார் .இந்த தற்கொலை பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் .

“ஆண்களோடு அரட்டையடிக்க போன் கேக்கல , ஆன்லைன் க்ளாஸுக்குத்தானே கேக்குறேன் ”  -மறுத்த தந்தையால் மனம் வெறுத்து தற்கொலை செய்து கொண்ட மாணவி .