அருவியில் இருந்து திடீரென குபுகுபுவென பெருக்கெடுத்த வெள்ளம்- 3 மாணவர்கள் பலி
ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் அருவியில் குளிக்க சென்ற எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர்கள் திடீரென வந்த வெள்ளம் வந்ததால் அதில் சிக்கி மூன்று மாணவர்கள் அடித்து செல்லப்பட்டனர். இருவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் ஒரு மாணவியின் சடலத்தை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் ஏலூரில் உள்ள ஆஷ்ரம் கல்லூரியில் எம்பிபிஎஸ் இரண்டாம் ஆண்டு படிக்கும் மருத்துவ மாணவர்கள் 14 பேர் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா வாகனத்தில் மரேடுமில்லியில் உள்ள அருவியில் சுற்றுலா பகுதிக்கு சென்றனர். அங்கு 'ஜலதரங்கிணி' அருவி சென்று அங்கு நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருந்தனர். அப்போது அங்கு பலத்த மழை பெய்தது. இதில் அருவியில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 5 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் விஜயநகரத்தை சேர்ந்த ஹரினிபிரியா, காயத்ரி புஷ்பா ஆகியோரை மீட்டு ரம்பச்சோடவரம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
ஹரிணிபிரியாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால் ராஜமகேந்திரவரத்திற்கு மேல் சிகுச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் காணாமல் போன பிரகாசம் மாவட்டம் மார்க்கபுரத்தைச் சேர்ந்த சி.எச்.ஹரதீப் (20), விஜயநகரைச் சேர்ந்த கோசிரெட்டி சௌமியா (21), பாப்பட்லாவை சேர்ந்த பி.அமிர்தா (21) ஆகியோர் காணமல் போனார்கள். அவர்களை இன்று காலை போலீசார் மீட்பு பணியில் ஈடுப்பட்டு செளமியா, அமிர்தா சடலத்தை மீட்டனர். ஹரதீப் சடலத்தை தேடி வருகின்றனர்.