ராஜினாமா செய்ய தயார் - மம்தா பானர்ஜி

 
மம்தா பானர்ஜி

மக்கள் நலனுக்காக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் டாக்டர்கள் போராட்டம்

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பெண் பயிற்சி மருத்துவர் கடந்த மாதம் 9-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காவல் துறையோடு இணைந்து பணியாற்றும் தன்னார்வலர் சஞ்சய் ராய் (33) கைது செய்யப்பட்டு, அவரிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே மருத்துவர் மரணதிற்கு நீதி கேட்டு மாநிலம் முழுவதும் போராட்டங்கள் வலுத்துவருகின்றன. ஜூனியர் மருத்துவர்களின் போராட்டம் முடிவுக்கு வராத நிலையில் நாட்டு மக்களிடம் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மன்னிப்பு கோரினார்.

மம்தா பானர்ஜி

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, “பெண் மருத்துவர் பாலியல் விவகாரத்தில் நீதி கிடைக்க வேண்டும், பதவி முக்கியமல்ல. மக்கள் நலனுக்காக மேற்கு வங்க முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய தயார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதில்லை. பெண் மருத்துவர் கொலைக்கு நானும் நீதி கேட்கிறேன். பதவியை பற்றி எனக்கு கவலையில்லை. நீதி கிடைக்க வேண்டும் என்றுதான் நான் கவலைப்படுகிறேன்” என்றார்.