பாரின் சரக்கா குடியுங்க குடிமகன்களே.. இறக்குமதி மதுபானங்கள் மீதான வரியை குறைத்த மகாராஷ்டிரா அரசு

 
மதுபானங்கள்

மகாராஷ்டிராவில் இறக்குமதி செய்யப்படும் மதுபானங்கள் மீதான வரியை அம்மாநில அரசு அதிரடியாக குறைத்துள்ளது.

நம் நாட்டில் பெரும்பாலான மாநில அரசுகளின்  வருவாயில் பெரும்பகுதி மதுபானங்கள் மீது விதிக்கப்படும் வரிகள் வாயிலாக கிடைக்கிறது. மதுபானங்கள் வாயிலாக கிடைத்து வரும் வருவாய் பாதிக்கப்பட்டால், பல மாநில அரசுகள் அரசு எந்திரத்தை இயக்குவதில் நெருக்கடியை சந்திக்கும். வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானங்கள் மீது அதிகளவில் விதிக்கப்படுவதால் மாநில அரசுகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது.

பணம்

இந்நிலையில், மகாராஷ்டிரா அரசு இறக்குமதி செய்யப்படும் மதுபானங்கள் மீதான வரியை அதிரடியாக குறைத்துள்ளது. மாநிலத்தில் கலப்பட சாராயம் அல்லது மது விற்பனையை தடுக்கவும், அரசின் கலால் வரி வருமானத்தை அதிகரிக்கும் நோக்கிலும் இறக்குமதி மதுபானங்கள் மீதான வரியை முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு அதிரடியாக குறைத்துள்ளது.

மதுபானம்

ஷிவாஸ் ரீகல், ஜானி வால்கர் விஸ்கி போன்ற இறக்குமதி செய்யப்படும் பல பிரபலமான பிராண்டுகள் மதுபானங்கள் மீதான கலால் வரியை 150 சதவீதமாக மகாராஷ்டிரா அரசு குறைத்துள்ளது. முதலில் இறக்குமதி செய்யப்படும் மதுபானங்கள் மீதான கலால் வரி 300 சதவீதமாக இருந்தது. மகாராஷ்டிரா அரசின் இந்த நடவடிக்கையால் குடிமகன்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.