580 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மிக நீண்ட சந்திர கிரகணம் - முக்கிய தகவல் இதோ!

 
moon

பூமி -சூரியன்- நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் நாளை சந்திர கிரகணம் என்று கூறுகின்றனர்.  நிலவின் மீது விழக்கூடிய சூரியனின் ஒளியை பூமி முழுமையாக மறைத்தால் முழு சந்திர கிரகணம் என்கிறோம் . அதுவே பாதியாக மறைத்தால் அது பகுதி சந்திரகிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது.

lunar eclipse 2021

சந்திர கிரகணம் பௌர்ணமி நாளிலும், சூரிய கிரகணம் அமாவாசை நாளிலும் ஏற்படுவது வழக்கம். பொதுவாக ஆண்டுக்கு இருமுறை சந்திர கிரகணமும் , 2முறை  சூரிய கிரகணமும் நிகழும். இரவு நேரத்தில் வரும் சந்திர கிரகணமும் - பகல் நேரத்தில் வரும் சூரிய கிரகணமும் தான் இந்தியாவில் தெரியும்.

சந்திர கிரகணம்

அந்த வகையில் இன்று நிகழும் பகுதி அளவு சந்திரகிரகணமானது பகல் 12.48 மணிக்கு தொடங்கி மாலை 4.17 மணி வரை நிகழும்.  இந்த சந்திர கிரகணத்தின் கால அளவு மட்டும் சுமார் 3 மணிநேரம் 28 நிமிடம் 24 வினாடிகள்.   580 ஆண்டுகளில் நீண்ட நேர சந்திர கிரகணம் இப்போது தான் நிகழ்கிறது. அருணாச்சல பிரதேசம், அசாம் உள்ளிட்ட பகுதிகளில் சந்திர உதயத்திற்கு பின்னர் பகுதியளவு சந்திர கிரகணத்தின் கடைசித் தருணங்களில் பார்க்க முடியும்.  தென்னிந்திய மாநிலங்களில் இந்த பகுதி நேர சந்திரகிரகணம் தெரிய வாய்ப்பில்லை.

moon

1440 ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி இந்த நீண்ட நேர சந்திரகிரகணம் நிகழ்ந்துள்ளது .இது மீண்டும் 2669 ஆம் ஆண்டு தான் நிகழும். சந்திர கிரகணத்தை வட அமெரிக்கா ,தென் அமெரிக்கா ,கிழக்கு ஆசியா , ஆஸ்திரேலியா,  பசிபிக் பிராந்தியத்தில் தெளிவாக காணமுடியும்.