11 நாட்களாக தொடரும் நிலச்சரிவு துயரம்.. வயநாடு செல்கிறார் பிரதமர் மோடி..

 
modi

நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள வயநாட்டிற்கு பிரதமர் மோடி இன்று பயணம் மேற்கொள்கிறார்.  

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த மாதம் 30ம் தேதி நள்ளிரவு மற்றும் அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவுகளால் சூரல்மலை, மேப்பாடி, முண்டக்கை, அட்டமலை, பூஞ்சிரித்தோடு உள்ளிட்ட கிராமங்கள் உருக்குலைந்து போயுள்ளன. சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்த இடம் தெரியாத அளவிற்கு மண்ணில் புதைந்துவிட்டன. அந்த வீடுகளில் இருந்த ஏராளமான மக்கள்  மண்ணில் புதைந்ததோடு, பலர் வெள்ளப்பெருக்கில் அடித்துச்செல்லப்பட்டனர்.   இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 420க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்திருக்கின்ற நிலையில், 11 நாட்களைக் கடந்து மீட்பு பணிகள் நீடித்து வருகின்றன. 

wayanad

வயநாடு பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினரும் மீட்பு பணிகளை முடித்துக்கொண்டு வெளியேறினர். வயநாடு மாவட்டத்தில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ல பள்ளிகளைத் தாண்டி, மற்ற பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கப்பட்டுவிட்டன. வயநாடு பேரழிவை  தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், பிரதமர் மோடி இன்று வயநாட்டிற்கு செல்கிறார். காலை 11 மணிக்கு கண்ணூர் செல்லும் பிரதமர் மோடி, வான் வழியாக நிலச்சரிவு பாதிப்புகளை பார்வையிருகிறார். தொடர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மக்களையும் பிரதமர் மோடி சந்திக்கிறார்..