பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட இளைஞரை தாக்கி நிர்வாணமாக ஊர்வலம்

 
attack

பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறி, ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு நிர்வாணப்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள மஹாராஜா பூங்காவில் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறி, போக்குவரத்து நெரிசல் மிகுந்த சந்திப்பு பகுதியில் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வரும் மேகராஜ் என்பவர், ஹாசன் நகரில் உள்ள மகாராஜா பூங்காவிற்கு குடிபோதையில் சென்று அங்கிருந்த ஒரு பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது அந்தப் பெண் கூச்சலிட்டு உள்ளார், சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் மேகராஜை தாக்கி, நிர்வாணமாக்கி போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளார்.

இதையடுத்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், அந்த இளைஞரை மீட்டு அத்துடன் அவரை தாக்கியதாக கூறப்படும் பிரஜா சக்தி மாவட்ட தலைவர் பிரவீன் கவுடா உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் மீது, பாதிக்கப்பட்ட பெண் எந்த புகாரும் கொடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது.