ஒரு விமானி பயிற்சிக்காக மட்டும் ரூ.2 கோடி வரை செலவிடுகிறார்.. மத்திய அமைச்சர் சிந்தியா

 
ஜோதிராதித்ய சிந்தியா

ஒரு விமானி பயிற்சிக்காக மட்டும் ரூ.2 கோடி வரை செலவிடுகிறார் என்று மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.

டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பேசுகையில், தற்போது நமக்கு 9,500 விமானிகள் (பைலட்கள்) தேவை. 40 சதவீதத்துக்கும் அதிகமான விமானிகள் பயிற்சிக்காக வெளிநாடு செல்கின்றனர். இதனால் அன்னிய செலாவணி வெளியே செல்கிறது. ஒரு விமானி பயிற்சிக்காக சுமார் ரூ.1.5 கோடி முதல் ரூ.2 கோடி வரை செலவிடுகிறார். ஆகையால் நாம் இங்கு பறக்கும் மற்றும் பைலட் பயிற்சியை நோக்கி நாம் செல்ல வேண்டும் என்று தெரிவித்தார். 

விமானிகள்

முன்னதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, 7 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் விமான எரிபொருள் மீதான வாட் வரியை குறைத்துள்ளன. மேலும் பல மாநிலங்கள் இதை பின்பற்றும் என எதிர்பார்க்கிறேன். விமான எரிபொருள் மீதான தற்போதைய வரி கட்டமைப்பால் உங்களால் வலுவான சிவல் விமானப் போக்குவரத்தை துறையை வைத்திருக்க முடியாது. அதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

வாட் வரி

இந்திய விமானப் போக்குவரத்து துறை பல சவால்களை கடந்து உலகின் மிகவும் இலாபகரமான விமான சந்தைகளில் ஒன்றாக மாறியுள்ளது. அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தப்படியாக 3வது பெரிய உள்நாட்டு  போக்குவரத்தை இந்தியா இன்று கையாளுகிறது. இந்த அடர்த்தியான உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தில், நாட்டின் போக்குவரத்து முக்கிய அங்கம் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை நாம் அறிவோம் என்று தெரிவித்தார்.