உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நியமனம்

 
ச்

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னாவை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார். அடுத்த தலைமை நீதிபதியாக நவம்பர் 11 ஆம் தேதி சஞ்சீவ் கண்ணா பதவியேற்கிறார். உச்சநீதிமன்ற புதிய மற்றும் 51ஆவது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பதவிக்காலம் நவம்பர் 10 ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், 11ஆம் தேதி முதல் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா தொடர்வார். உச்சநீதிமன்ற தற்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட், ஏற்கனவே சஞ்சீவ் கண்ணா பெயரை பரிந்துரைத்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.