மீண்டும் உயரும் கொரோனா : ஒரேநாளில் 437 பேர் உயிரிழப்பு!

 
CORONA

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 437 ஆக உயர்ந்துள்ளது. 

corona

இந்தியாவில் கொரோனா  வைரஸ் இன்னும் முடிவுக்கு வந்த பாடில்லை. கொரோனா முதல் அலை, இரண்டாம் அலை யில் லட்சக்கணக்கான மக்கள் சிக்கி உயிரிழந்த நிலையில், மூன்றாம் அலை பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் கொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்றும் வகையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு  வருகிறது. அத்துடன் அந்தந்த மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பை கருத்தில் கொண்டு, ஊரடங்கு கட்டுப்பாடுகளும், தளர்வுகளும் விதிக்கப்பட்டு வருகிறது. 

corona

இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 9,283  பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 7,579  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று உயர்ந்துள்ளது. ஒரேநாளில் கொரோனாவிலிருந்து10,949  பேர் குணமாகியுள்ள நிலையில்,  437 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.  அத்துடன் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,11,481 ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த  537 நாட்களில் இல்லாத அளவுக்கு குறைவான எண்ணிக்கையாகும்.