இந்தியாவில் 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு!

 
CORONA

இந்தியாவில் ஒரேநாளில் 9,119 பேர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

corona

இந்தியாவில் கொரோனா பாதிப்பு சில வாரங்களாக ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்தியாவில் 2020 மார்ச் மாதம் முதல் கொரோனா  தீவிரமடைய தொடங்கிய நிலையில் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு, கொரோனாவை  கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய ,மாநில அரசுகள் இறங்கின.  ஊரடங்கு கட்டுப்பாடு, போக்குவரத்து தடை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் துரிதமாக நடைபெற்று வந்தது. அந்த வகையில் தற்போது இந்தியாவில் நூறு கோடிக்கும் அதிகமான  தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன் பலனாக இந்தியாவில் தினம் தோறும் லட்சக்கணக்கில் பதிவாகி வந்த தினசரி பாதிப்பு என்பது தற்போது 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது

corona

இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 9,119  பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 7,579  பேரும் , நேற்று  9,283  பெருகும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து பதிவாகியுள்ளது. ஒரேநாளில் கொரோனாவிலிருந்து10,264    பேர் குணமாகியுள்ள நிலையில்,  396 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.  நேற்று கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை   437 ஆக பதிவாகியது. தற்போது உயிரிழப்பு எண்ணிக்கையும் குறைந்துள்ளது. அத்துடன் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,09,940 ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த  539 நாட்களில் இல்லாத அளவுக்கு குறைவான எண்ணிக்கையாகும்.