இந்தியாவில் 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு!!

 
corona death

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்தியாவில் கொரோனா பாதிப்பு  பரவ தொடங்கியது.  லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதுடன் பரிதாபமாக உயிரிழந்தனர்.  இதனால் கொரோனாவை தடுக்கும் ஆயுதமாக ஜனவரி 15ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி படிப்படியாக நடைபெறத் தொடங்கியது . தற்போது 18 வயதை கடந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.  கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக்-வி ஆகிய மூன்று வகை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று மற்றும் பலி எண்ணிக்கை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. 

corona

இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 8,865 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,44,56,401 ஆக உள்ளது.  அத்துடன் ஒரேநாளில்  197 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நேற்று 125 பேர் பலியான நிலையில் இன்று மீண்டும் கொரோனா உயிரிழப்பு அதிகரித்துள்ளது. இதன் மூலம் இதுவரை கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 4,63,852 ஆக உள்ளது. 

corona death

அத்துடன் தற்போது கொரோனவால் பாதிக்கப்பட்டு1,30,793 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 11,971 ஆக உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,38,61,756 ஆக உயர்ந்துள்ளது.