110 கோடியை கடந்தது கொரோனா தடுப்பூசி : தொடர்ந்து உயரும் இறப்பு எண்ணிக்கை!!

 
vaccine

இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 110 கோடியை எட்டியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு என்பது கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பரவ தொடங்கியது.  லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால்பாதிக்கப்பட்டதுடன் பரிதாபமாக உயிரிழந்தனர்.  இதனால் கொரோனாவை தடுக்கும் ஆயுதமாக ஜனவரி 15ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி படிப்படியாக நடைபெறத் தொடங்கியது . தற்போது 18 வயதை கடந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.  கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக்-வி ஆகிய மூன்று வகை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

vaccine

இதன் மூலம் நாட்டில் தடுப்பூசி 2 டோஸ்களும் செலுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை கடந்த மாதம்  21ம் தேதி 100 கோடியை கடந்தது.  மொத்தம் 284 நாட்களில் 100 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. தற்போது 110 கோடி என்ற மைல்கல்லை தொட்டுள்ளது. தற்போது மத்திய மாநில அரசுகளின் கூட்டு முயற்சியினால் தினசரி குறைந்த பாதிப்பும் 15 ஆயிரத்திற்கும் கீழ் ஆக பதிவாகி வருகிறது. இருப்பினும் இறப்பு எண்ணிக்கை  நாளுக்குநாள் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது.இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 12,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  அத்துடன் இன்று ஒரேநாளில் 501 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அத்துடன் தற்போது கொரோனவால் பாதிக்கப்பட்டு 1,37,416 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது கடந்த 267 நாட்களில் பதிவானதை விட குறைவான எண்ணிக்கை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.