இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா : ஒரேநாளில் 301 பேர் பலி!!

 
corona


இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு  10,197 பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தொடங்கி இன்றுவரை ஓயாமல் உள்ளது. கொரோனா முதல் அலை, இரண்டாம் அலை என உருவாகி மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்ட நிலையில் மூன்றாம் அலை ஏற்படாமல் இருக்க, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

corona

இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 10,197 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,44,66,598 ஆக உள்ளது.  அத்துடன் ஒரேநாளில்  301 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நேற்று 197 பேர் பலியான நிலையில் இன்று மீண்டும் கொரோனா உயிரிழப்பு வெகுவாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் இதுவரை கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 4,64,152 ஆக உள்ளது. 

corona

அத்துடன் தற்போது கொரோனவால் பாதிக்கப்பட்டு1,28,555 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 12,134 ஆக உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,38,73,890 ஆக உயர்ந்துள்ளது.