வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!

 
tax

வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

tax

வருமான வரி கணக்கு தாக்கல் குறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,  2021 - 22 ஆம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய கடந்த ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. தற்போது இது பிப்ரவரி மாதம் 2022ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.  தற்போதைய கொரோனா  மற்றும் ஒமிக்ரான் காரணமாகவும் ஆன்லைன் வாயிலாக கணக்கு தாக்கல் செய்வதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு,  வருமான வரித் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் வருகிற மார்ச் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

taz

வருமான வரித் தாக்கலுக்கு www.incometax.gov.in என்ற புதிய இணையதளம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசு சார்பில் தொடங்கப்பட்டது. இப்புதிய இணையதளத்தில்  பல்வேறு அம்சங்கள் இருந்தாலும், இதில் பிரச்னைகளும்  உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. தொடர் புகார் காரணமாக  வரித் தாக்கலுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.