ஐயப்ப மாலையுடன் தர்காவில் வழிபட்ட ராம் சரண்
ஆந்திர மாநிலம் கடப்பாவில் பெரிய தர்காவில் ஐயப்ப மாலையுடன் வந்து நடிகர் ராம்சரண் வழிபாடு நடத்தி பிரார்த்தனை செய்தார்.
ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள புகழ்பெற்ற அமீன்பீர் பெரிய தர்கா உள்ளது. இந்த தர்காவில் நடைபெற்ற 80வது தேசிய முஷைரா கஜல் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் ராம்சரனுக்கு இந்த அழைப்பை ஏற்ற ராம் சரண் மூன்று மாதங்கள் முன்பே வருவதாக கூறியிருந்தார். இந்நிலையில் சபரிமலைக்கு செல்ல ஐயப்ப மாலை அணிந்து விரதம் இருக்கும் ராம் சரண் ஏ.ஆர். ரகுமான் அழைப்பை ஏற்று ராம் சரண் தர்கா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பேசிய ராம் சரண், கடப்பா தர்காவுடன் எனக்கு வலுவான தொடர்பு உள்ளது.
இந்த தர்கா என்றால் எனக்கு தனி சிறப்பு எனது திரைப்பட துறையில் மிக முக்கியமான படமான மகதீரா ரிலீஸுக்கு முந்தைய நாள் இந்த தர்காவிற்கு வந்தேன். அந்த படம் மிகப் பெரிய ஹிட் ஆனது, நல்ல நட்சத்திர அந்தஸ்தை எனக்கு கொண்டு வந்தது அனைவருக்கும் தெரியும். மேலும், இந்த தர்காவில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு ஏ.ஆர்.ரஹ்மான் மூன்று மாதங்களுக்கு முன் அழைத்தார். நானும் வருகிறேன் என்று சொன்னேன். அவருக்கு கொடுத்த வாக்குறுதிக்காக ஐயப்ப மாலையில் இருந்தாலும் தர்காவுக்கு வந்தேன். இங்கு வந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்றார். ராம் சரண் வருகையால் கடப்பா நகரம் முழுவதும் ரசிகர்களால் திரண்டு அணிவகுத்து வந்தனர்.