ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் : ஆளும் கட்சியை பின்னுக்கு தள்ளிய பாஜக!

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் : ஆளும் கட்சியை பின்னுக்கு தள்ளிய பாஜக!

ஹைதராபாத் மாநகராட்சியில் 80க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் : ஆளும் கட்சியை பின்னுக்கு தள்ளிய பாஜக!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் அதிக தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. மொத்தமுள்ள 150 இடங்களில் 80க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. 30க்கும் மேற்பட்ட இடங்களில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியும், 15க்கும் மேற்பட்ட இடங்களில் ஒவைசி கட்சியும் , ஒரு இடத்தில் காங்கிரஸ் கட்சியும் முன்னிலையில் உள்ளது.

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் : ஆளும் கட்சியை பின்னுக்கு தள்ளிய பாஜக!

இதன்மூலம் தெலங்கானாவில் ஆளும் கட்சியாக உள்ள தெலங்கானா ராஷ்டீரிய சமிதி 2 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. நாட்டின் ஐந்தாவது மிகப்பெரிய மாநகராட்சியான ஹைதராபாத்தில் மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 1 ஆம் தேதி நடைபெற்றது. 150 வார்டுகளை கொண்ட ஹைதராபாத் மாநகராட்சியில் 74.67 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 1,122 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் டிஆர்எஸ் 150 ,பாஜக 149, காங்கிரஸ் 146 ,தெலுங்குதேசம் 106 , ஓவைசியில் AIMIM 51 இடங்களில் போட்டியிட்டன. ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் பரப்புரையில் உள் துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.