கொள்ளையடித்த பணத்தை பேருந்தில் எடுத்து சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்! நடத்துனரை சுட்டதால் பரபரப்பு

 
a

கர்நாடக மாநிலம் பீதரில் எஸ்.பி.ஐ. ஏடிஎம் மையத்தில்  பணம் நிரப்ப கொண்டு வந்த வாகனத்தில் இருந்த இரண்டு பாதுகாவலர்களைச் துப்பாக்கியால் சுட்டு கொன்று  ரூ.93 லட்சம்  பணத்தைக் கொள்ளையடித்தனர்.  அந்த கொள்ளை கும்பல் பீதரில் இருந்து கர்நாடக போலீசாரிடமிருந்து தப்பி இருவரும்  வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு தெலங்கானா மாநில ஐதராபாத்  அப்சல்கஞ்சில் உள்ள ரோஷன் டிராவல்ஸ்க்கு வந்தனர். அங்கு ஐதராபாத்திலிருந்து சத்தீஸ்கரில் உள்ள ராய்ப்பூருக்கு பயணிக்க இரண்டு கொள்ளையர்கள் டிக்கெட் முன்பதிவு செய்தனர். இரவு 7:30 மணிக்கு அப்சல்கஞ்சிலிருந்து ராய்ப்பூருக்குப் பேருந்து புறப்பட இருந்தது. பேருந்து பயணிகளை அனுமதித்த பிறகு, டிக்கெட் மேலாளர் ஜஹாங்கிர் பயணிகளின் பைகளை சரிபார்த்தார்.

அதே நேரத்தில், கொள்ளை கும்பலை சேர்ந்த இருவரின் பைகளை சரிபார்க்க முயன்றனர். அதேநேரத்தில் பேருந்தின் பின் இருக்கையில் ஒரு வழக்கின் விசாரணைக்காக இரண்டு பீதர் போலீசார் ஐதராபாத்தில் இருந்து ராய்ப்பூருக்கு செல்ல அமர்ந்திருந்தனர். மற்றொரு ஊழியர் போலீசார் பைகளை சோதனை செய்ய முயன்றபோது தாங்கள் போலீசார் என்றும், அவர்களின் பைகளை சரிபார்க்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறினர். இதைக் கேட்டதும் கொள்ளை கும்பல் பீதர் போலீசார் தங்களைத் தேடி வந்ததாக நினைத்தனர். அதே நேரத்தில், ஜஹாங்கிர் கொள்ளையர்கள் பைகளை சரிபார்க்க வலியுறுத்தினார். ஆனால் அவர்கள் தடுத்து நிறுத்தி ரூ.50 ஆயிரம் பணம் கொடுத்து தங்கள் பையை சோதனை செய்ய வேண்டாம் என கூறியுள்ளனர்.

Bidar Heist : ATM Cash Van Robbed, Security Guards Killed

இதனால் கொள்ளையர்களின் நடத்தை சந்தேகத்திற்குரியதாக இருந்ததால், ஜஹாங்கிர் அவர்களை கீழே இறங்குமாறு எச்சரித்தார். உடனே  அவர்கள் தங்கள் பைகளுடன் கீழே சென்றபோது போலீசார், அதே பஸ்சில் இருந்ததால்  ​தப்பிக்க முயன்று ஜஹாங்கிர் மீது  ஐந்து முறை துப்பாக்கி சூடு நடத்திவிட்டு பணத்துடன் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் ஜஹாங்கீரின் வயிற்றை துளைத்தது தோட்டா. உடனே உயிருக்கு பயந்து ஜஹாங்கீர் சுமார் 200 மீட்டர் தூரம் ஓடி ரோஷன் டிராவல்ஸை அடைந்தார். ஜஹாங்கிர் அங்கு மயங்கி விழுந்ததை அடுத்து, ரோஷன் டிராவல்ஸ் நிர்வாகத்தினர் அவரை உஸ்மானியா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் தகவல் கிடைத்ததை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கைரேகை , தடவியியல் குழு சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர். தலைமறைவான குற்றவாளிகளைத் தேடும் பணியில் அப்சல்கஞ்ச் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.