ஹெச்எம்பி வைரஸ் புதியதல்ல- மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா
ஹெச்எம்பி வைரஸ் புதியதல்ல என நிபுணர்கள் தெளிவுபடுத்தி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ஜெ.பி.நட்டா, “சீனாவில் பரவிவரும் ஹெச்எம்பிவி நோய் தொற்று தொடர்பாக யாரும் கவலைப்பட தேவையில்லை. மத்திய அரசு நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஹெச்எம்பிவி புது வைரஸ் அல்ல என வல்லுநர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். அதனால் பயப்பட வேண்டிய காரணமில்லை. நம் சுகாதாரத்துறை விழிப்போடு கண்காணித்து வருகிறது. இது முதன்முதலில் 2001ல் கண்டறியப்பட்டது. பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்த வைரஸ் காற்றின் மூலம், சுவாசத்தின் மூலம் பரவக்கூடியது. இது அனைத்து வயதினரையும் பாதிக்கும். குளிர்காலத்தில்தான் அதிகம் பரவும். வசந்த காலத்தின் ஆரம்ப நாட்களிலும் பரவும். தகுந்த முன்னெச்சரிக்கை இருந்தாலே போதும். எந்தவொரு சுகாதார சவால்களுக்கும் இந்தியா தயாராக உள்ளது” எனக் கூறியுள்ளார்.