ஆபாச விளம்பரங்கள்; கேள்விக்குறியாகும் சிறார்களின் எதிர்காலம் : கூகுள் நிறுவனத்தின் அதிரடி முடிவு!

 

ஆபாச விளம்பரங்கள்; கேள்விக்குறியாகும் சிறார்களின் எதிர்காலம் : கூகுள் நிறுவனத்தின் அதிரடி முடிவு!

உலகம் முழுவதும் கொரோனாவால் முடங்கிப்போய் உள்ளது. குறிப்பாக இந்தியாவில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் எதுவும் இயங்கவில்லை. மாறாக ஸ்மார்ட்போன்கள், லேப்டாப், டேப்லெட் மூலமாக ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.இந்த ஆன்லைன் வகுப்புகளின் போது மாணவர்களின் கவனத்தை திசை திருப்பும் வகையிலும், அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் வகையிலும் ஆபாச இணையதளங்கள் மூலம் விளம்பரங்கள் திடீரென தோன்றி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. அத்துடன் மாணவர்கள் வெகுநேரம் ஸ்மார்ட் போன்கள் , இணையம் என நேரத்தை செலவழிப்பது மூலம் அவர்களின் எண்ண ஓட்டம் எப்படி ஆக உள்ளது, அவர்கள் இணையத்தில் என்ன மாதிரியான விஷயங்களை பார்க்கின்றனர் என்பது தெரியாமலேயே போய்விடுகிறது.

அந்த வகையில் இளம் பயனர்களுக்கு இணையத்தை பாதுகாப்பான இடமாக மாற்ற கூகுள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தேடல் நிறுவனமான கூகுள் சிறார்களுக்கு அதிக கட்டுப்பாட்டை வழங்க முடிவெடுத்துள்ளது. 18 வயதிற்குட்பட்ட பயனர்களின் படத்தை பாதுகாப்பு கருதி இனி நீக்கலாம். ஆனால் இந்த புகைப்படமானது வலையிலிருந்து நீங்காது. இந்த மாற்றம் ஆன்லைனில் அதிக கட்டுப்பாட்டைக் கொடுக்க உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபாச விளம்பரங்கள்; கேள்விக்குறியாகும் சிறார்களின் எதிர்காலம் : கூகுள் நிறுவனத்தின் அதிரடி முடிவு!

குழந்தைகளுக்கு பாதுகாப்பான ஆன்லைன் அனுபவத்தை வழங்கும் முயற்சியில், வரவிருக்கும் வாரங்களில், 18 வயதிற்குட்பட்டவர்களின் வயது, பாலினம் மற்றும் நலன்களின் அடிப்படையில் தவறான விளம்பரங்களை தடுக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே 13 வயதுக்குட்பட்ட எவரும் கூகுள் கணக்கை தொடங்க முடியாது. அதேசமயம் இவர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலர் உதவியுடன் கூகுள் கணக்கை கையாளலாம் என்பது நடைமுறையில் உள்ளது.

ஆபாச விளம்பரங்கள்; கேள்விக்குறியாகும் சிறார்களின் எதிர்காலம் : கூகுள் நிறுவனத்தின் அதிரடி முடிவு!

குழந்தைகளின் வயது, பாலினம் அல்லது ஆர்வங்களின் அடிப்படையில் விளம்பரங்களை குறிவைப்பதை கூகுள் இனி அனுமதிக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வயது குறைந்த பயனர் தனது வயதை போலியாக குறிப்பிட்டு அக்கவுண்ட்டை உருவாகியுள்ளரா என்பதை கண்டறிய எந்த வழிமுறையும் இல்லை. இதுபோன்ற குறைபாடுகளை மனதில் கொண்டு, யூடியூப், கூகுள் சர்ச் ஆப், கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய கூகுள் அதன் பயன்பாடுகளில் மாற்றங்களைச் செய்கிறது.

ஆபாச விளம்பரங்கள்; கேள்விக்குறியாகும் சிறார்களின் எதிர்காலம் : கூகுள் நிறுவனத்தின் அதிரடி முடிவு!

பெற்றோர்கள் மேற்பார்வையில் கணக்குகளை அமைக்க, திரை நேர வரம்பு, டிஜிட்டல் கல்வியறிவுத் திட்டம் குழந்தைகளுக்கு எப்படி பாதுகாப்பான குடிமக்களாக இருக்க உதவுகிறது என்பதை அறிய உதவுகிறது. யூடியூப் கிட்ஸ் ஆப், கிட்ஸ் ஸ்பேஸ் மற்றும் ஆசிரியர் அங்கீகரிக்கப்பட்ட ஆப்ஸ், ப்ளே சலுகை அனுபவங்களை இளம் வயது பயனாளர்கள் பெறலாம்.

அதேபோல் கூகுள் பிளே ஸ்டோரில் ஒரு புதிய பாதுகாப்பு பிரிவை தொடங்குகிறது. இது குழந்தைகளின் இணைய நடவடிக்கைளை பெற்றோருக்கு தெரியப்படுத்தும். ஆப்ஸ் , அவர்கள் சேகரிக்கும் தரவு என்ன என்பதையும் தெளிவுபடுத்தும். இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தை ஒரு விஷயத்தை பதிவிறக்குவதற்கு முன்பே அது சரியானதா என்பதைத் தீர்மானித்து கொள்ளலாம்.