மாநிலத்துக்கு தாராளமா வாங்க… ஆனால் இரண்டுல ஒன்னு கட்டாயம்… மக்களுக்கு செக் வைச்ச கோவா…

 

மாநிலத்துக்கு தாராளமா வாங்க… ஆனால் இரண்டுல ஒன்னு கட்டாயம்… மக்களுக்கு செக் வைச்ச கோவா…

சுற்றுலாவுக்கு பெயர் போன கோவா மாநிலத்தில் ஆரம்பத்தில் கொரோனா வைரஸால் பாதிப்பு மிகவும் குறைவாக இருந்தது. வெறும் 7 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது. அவர்களும் குணம் அடைந்ததையடுத்து கொரோனா வைரஸ் இல்லாத மாநிலமாக கொரோனா வைரஸ் அறிவிக்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வண்ணம் அண்மையில் திடீரென கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. தற்போது மொத்தம் 39 பேர் கோவாவில் கொரோனா வைரசுக்கு சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

மாநிலத்துக்கு தாராளமா வாங்க… ஆனால் இரண்டுல ஒன்னு கட்டாயம்… மக்களுக்கு செக் வைச்ச கோவா…

இந்நிலையில் வெளிமாநிலங்களிலிருந்து கோவாவுக்கு வருபவர்களால் கொரோனா வைரஸ் பரவி விடக்கூடாது என்ற எண்ணத்தில் பயணிகளுக்கு நிலையான செயல் நடைமுறையை அம்மாநில அரசு கொண்டு வந்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில சுகாதார துறை செயலாளர் நிலா மோஹனன் கூறியதாவது: சாலை, ரயில் மற்றும் விமானம் வாயிலாக கோவாவுக்கு வரும் பயணிகளுக்கு மாநிலத்தின் நுழைவு பகுதியில் முதலில் தெர்மல் பரிசோதனை நடத்தப்படும். பின் அங்கு அவர்கள் கட்டண கோவிட்19 பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் அல்லது வீட்டில் 14 நாட்கள் தனிமையாக இருக்க வேண்டும்.

மாநிலத்துக்கு தாராளமா வாங்க… ஆனால் இரண்டுல ஒன்னு கட்டாயம்… மக்களுக்கு செக் வைச்ச கோவா…

கோவாவுக்கு வரும் பயணிகளுக்கு அவர்களது பயணத்தின் போது சுய விருப்ப விண்ணப்பம் வழங்கப்படும். அந்த விண்ணப்பத்தில் கட்டணம் கோவிட்-19 பரிசோதனை அல்லது வீட்டில் தங்களை 14 நாள் தனிமைப்படுத்தி கொள்ளுதல் ஆகிய 2 இரண்டில் ஒன்றை கட்டாயம் தேர்வு செய்ய வேண்டும். அதேவேளையில், கோவா வரும் சர்வதேச பயணிகளும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்ற விதிமுறையில் மாற்றம் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். கோவிட்-19 பரிசோதனைக்காக கோவா அரசு ரூ.2 ஆயிரம் கட்டணம் வசூலிக்கிறது.