மதவெறியை தூண்டும் வழக்கு.. பா.ஜ.க.விலிருந்து விலகிய சுவாமி பிரசாத் மவுரியாவை கைது செய்ய வாரண்ட் பிறப்பிப்பு

 
சுவாமி பிரசாத் மவுரியா, அகிலேஷ் யாதவ்

உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க.விலிருந்து விலகிய சுவாமி பிரசாத் மவுரியாவை கைது செய்வதற்கான வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த சுவாமி பிரசாத் மவுரியா நேற்று முன்தினம் யார் எதிர்பாராத வண்ணம் மாநில அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார். இந்நிலையில், பா.ஜ.க.விலிருந்து விலகிய அடுத்த நாளில், சுல்தான்பூரில் அவரை கைது செய்வதற்கான வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க.

2014ல் சுவாமி பிரசாத் மவுரியா எதிராக வெறுப்பு பேச்சு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில்தான் தற்போது அவரை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுவாமி பிரசாத் மவுரியா பா.ஜ.கவில் இணைவதற்கு முன் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்தார். அதன் பிறகுதான் பா.ஜ.க.வில் இணைந்தார். தற்போது அவர் சமாஜ்வாடி கட்சிக்கு தாவியுள்ளார். 2014ல் பகுஜன் சமாஜ் கட்சியில் சுவாமி பிரசாத் மவுரியா இருந்தபோது ஒரு கூட்டம் ஒன்றில் இந்து கடவுள்களை அவதூறாக பேசினார்.

வெங்கையா நாயுடு சொன்னதை மோடி அரசாங்கம் கடைப்பிடிக்க வேண்டும்.. பகுஜன் சமாஜ் கட்சி வலியுறுத்தல்..

சுவாமி பிரசாத மவுரியா அந்த கூட்டத்தில், திருமணத்தின் போது கௌரி அல்லது விநாயகப் பெருமானை வழிபடக் கூடாது. தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதியினரை தவறாக வழிநடத்தி அடிமைப்படுத்த உயர் சாதி ஆதிக்க அமைப்பு செய்யும் சதி என்று பேசியிருந்தார். இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. மதவெறியை தூண்டும் வழக்கில் வரும் 24ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.