நட்டாவுக்கு பதில் முரளிதர் ராவ் முன்னிலையில் பா.ஜ.க-வில் இணைந்த அண்ணாமலை!

 

நட்டாவுக்கு பதில் முரளிதர் ராவ் முன்னிலையில் பா.ஜ.க-வில் இணைந்த அண்ணாமலை!

பா.ஜ.க பொதுச் செயலாளர் முரளிதர் ராவ் முன்னிலையில் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை இன்று பா.ஜ.க-வில் இணைந்தார்.
கர்நாடக மாநிலத்தில் ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த அண்ணாமலை திடீரென்று பதவியை ராஜினாமா செய்தார். கர்நாடகாவில் அளித்த பேட்டியில் அரசியலில் இறங்கப் போவதாக கூறினார். தமிழகத்தில் அரசியல் களம் தற்போது தயாராக இல்லை என்ற வகையில் பேசி வந்தார்.

நட்டாவுக்கு பதில் முரளிதர் ராவ் முன்னிலையில் பா.ஜ.க-வில் இணைந்த அண்ணாமலை!


ரஜினிகாந்த் ஆரம்பிக்க உள்ள கட்சியின் முதல்வர் வேட்பாளர் என்றெல்லாம் பேசப்பட்டு வந்த அண்ணாமலை இன்று திடீரென்று பா.ஜ.க-வில் இணைய உள்ளதாக தெரிவித்தார். டெல்லியில் இன்று காலை 11 மணி அளவில் பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அவர் பா.ஜ.க-வில் இணைய உள்ளதாக செய்தி வெளியானது.

நட்டாவுக்கு பதில் முரளிதர் ராவ் முன்னிலையில் பா.ஜ.க-வில் இணைந்த அண்ணாமலை!


ஆனால், ஜே.பி.நட்டாவை சந்திக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், பா.ஜ.க தேசிய பொதுச் செயலாளர் பி.முரளிதர் ராவ் முன்னிலையில் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை இன்று பா.ஜ.க-வில் இணைந்தார். இந்த நிகழ்வின் போது தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் உடன் இருந்தார்.
சமீபத்தில் தி.மு.க-வில் இருந்து கு.க.செல்வம் டெல்லி சென்று ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசினார். அதன் பிறகு லிஃப்ட் கேட்க பா.ஜ.க தலைவர்களை சந்தித்தேன் என்றார். அவரால் நட்டாவை சந்திக்க முடிந்தது. அண்ணாமலையால் முடியவில்லை என்று சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் இணையாததை வைத்து சமூக ஊடகங்களில் பலரும் அண்ணாமலையைக் கிண்டலடித்து வருகின்றனர்.