“ரூ.60 கோடியை கொடுத்துவிட்டு கிளம்புங்கள்”- அதிர்ச்சியில் ஷில்பா ஷெட்டி

 
z z

யூடியூப் நிகழ்ச்சிக்காக இலங்கை செல்ல அனுமதிக்கக்கோரிய நடிகை ஷில்பா ஷெட்டியின் மனுவை மும்பை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா. (கோப்பு புகைப்படம்)

ஒரு தொழிலதிபரை ஏமாற்றி ரூ.60 கோடி மோசடி செய்த வழக்கில் ஷில்பா ஷெட்டிக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், யூடியூப் நிகழ்ச்சிக்காக இலங்கை செல்ல அனுமதிக்கக்கோரி நடிகை ஷில்பா ஷெட்டி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் முதலில் ரூ.60 கோடியை கொடுத்துவிட்டு கிளம்புங்கள் என நீதிபதி கூறியதால் ஷில்பா ஷெட்டி தரப்பு அதிர்ச்சியில் உறைந்தது.

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் அல்லது வேறு எந்த வெளிநாட்டு இடத்திற்கும் பயணிக்க விரும்பினால், நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோர் முதலில் ரூ.60 கோடி டெபாசிட் செய்ய வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது . பயணம் செய்ய அனுமதி மறுத்த நீதிமன்றம், அவர்களுக்கு எதிராக வெளியிடப்பட்ட லுக் அவுட் சுற்றறிக்கையை (LOC) இடைநிறுத்தவும் மறுத்துவிட்டது. மும்பையைச் சேர்ந்த 60 வயதான தொழிலதிபரும் லோட்டஸ் கேபிடல் ஃபைனான்சியல் சர்வீசஸின் இயக்குநருமான தீபக் கோத்தாரியிடம் ரூ.60 கோடி மோசடி செய்ததாக ஷில்பா ஷெட்டி மீது புகார் எழுந்தது குறிப்பிடதக்கது.