ஐஸ்கிரீமில் கிடந்த விரல் யாருடையது ? பகீர் தகவல்
Jun 29, 2024, 07:53 IST1719627810746

ஐஸ்கிரீமில் கிடந்த விரல் யாருடையது என கண்டுபிடிக்கப்பட்டது.
மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆர்டர் செய்த கோன் ஐஸ்கிரீமில் கண்டெடுக்கப்பட்ட விரல், அந்த தொழிற்சாலையில் பணிபுரியும் ஓம்கர் என்பவரின் விரல் என DNA பரிசோதனையில் தகவல் வெளியாகியுள்ளது.ஐஸ்கிரீம் தயாரிக்கும்போது அவரின் நடுவிரல் துண்டாகி உள்ளே விழுந்ததாக கூறப்படுகிறது.
கடந்த ஜூன் 12ம் தேதி ஆன்லைனில் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்த பெண், அதில் இருந்த விரலைக் கண்டு அச்சமடைந்தார். இதையடுத்து போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் இது குறித்து விசாரணை நடத்தி இதைக் கண்டுபிடித்துள்ளனர்.