கேரளாவில் என்ஜினில் இருந்து ரயில் பெட்டிகள் தனியாக கழன்று சென்றாதால் பரபரப்பு

 
engine few coaches detach from ernakulam-tata nagar express

கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து டாடா நகர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜினில் இருந்து பெட்டிகள் கழன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Engine, few coaches of Ernakulam-Tata Nagar Express detach from main train  in Thrissur

எர்ணாகுளத்தில் இருந்து டாட்டா நகர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 10: 54 மணிக்கு திருச்சூரில் இருந்து சொர்னூர் ரயில் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது வள்ளத்தோடு என்ற இடத்தில் ரயில் சென்று கொண்டிருந்தபோது என்ஜினில் இருந்து ரயில் பெட்டிகள் கழன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே ஊழியர்கள் கழன்று சென்ற பெட்டிகளை என்ஜின் உடன் இணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Rail traffic disrupted after engine, coaches of running train detach in  Thrissur

என்ஜினில் இருந்து பெட்டிகள் தனியாக விடுபடும் பொழுது மிகப்பெரிய சத்தம் கேட்டதாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர். நிகழ்விடத்தில் இருந்து சற்று தூரத்தில் பாரதப் புழாவின் ஆற்றின் பாலம் உள்ளது. சற்று நேரத்தில் ரயில் பாலத்தின் மீது சென்றிருக்கும் நல்வாய்ப்பாக பாலத்திற்கு முன்பாகவே என்ஜினை விட்டு பெட்டிகள் கழண்டுவிட்டதால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது என்ஜினில் இருந்து ரயில் பெட்டிகள் வேறுபட்டதால் பயணிகளுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. ரயில்வே ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தில் ரயில் என்ஜினை இணைக்கும் பணியில் ஈடுபட்டு ரயிலை அங்கிருந்து கொண்டு சென்றனர். ரயில் நிலையம் கொண்டு சென்ற பிறகு முழுமையான ஆய்வு செய்து மீண்டும் ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.