போதை மருந்து, மர்ம எஸ்.எம்.எஸ்., கார் ஸேசிங் - கேரள அழகிகள் மரணத்தில் விலகாத மர்மங்கள்

 
fட்

அந்த ஓட்டலில் இருந்த சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டுள்ளன. போலீஸாருக்கு வந்த மர்ம எஸ்எம்எஸ் யார் அனுப்பியது என்று தெரியவில்லை.   குளிர்பானத்தில் போதை மருந்து கலந்து கொடுத்து இருப்பதாக தெரியவந்திருக்கிறது.   அன்று நடந்தது கார் ரேஸ் -ஆ இல்லை  கார் சேஸிங்கா என்ற சந்தேகம் வலுத்து வருவதால் கேரள அழகிகள் மரணத்தின் மர்மங்கள் நீடிக்கின்றன.

கேரள மாநிலத்தின் எர்ணாகுளம் மாவட்டத்தில் நகரின் வைட்டிலா பகுதியில் கடந்த 1ம் தேதி அன்று நடந்த  கோர விபத்தில் தென்னிந்திய அழகி அன்சி கபீர்,   கேரள அழகி அஞ்சனா ஷாஜன்  இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அல்

அன்சி கபீர் திருவனந்தபுரத்தில் ஆலம்கோடு பகுதியை சேர்ந்தவர்.  அஞ்சனா சாஜன் திருச்சூரை சேர்ந்தவர். கடந்த  2019 ஆம் ஆண்டு நடைபெற்ற கேரள அழகிப்போட்டியில் அன்சி கபீர் முதலிடம் பிடித்துள்ளார் .   அந்த போட்டியில் அஞ்சனா சாஜன் இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.   இதன் பின்னர் தென்னிந்திய அழகிப் போட்டியிலும் பங்கேற்று அன்சி கபீர் மகுடம் சூடி இருக்கிறார்.   தோழிகளான அன்சி கபீர் - அஞ்சனா  சாஜன் இருவரும் மாடலிங் துறையில் கலக்கி கொண்டு வந்திருக்கிறார்கள்.

 போர்ட் பியோ காரில் கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக சென்றிருக்கிறார்கள்.   அப்போது அதிவேகமாக கார் சென்றதால் அங்குள்ள மரத்தில் மோதி பயங்கர விபத்துக் குள்ளாகி அன்சி - அஞ்சனா இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  அவருடன் பயணித்த மற்ற 2 பேரும் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   முதற்கட்ட விசாரணையில் அங்கு உள்ள பொது மக்களிடம் விசாரித்த போது,  கார் அதிவேகமாக வந்தது.   கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது என்று தெரிவித்திருக்கிறார்கள்.  குறுக்கே ஒரு பைக் வந்தபோது திடீரென்று பிரேக் அடித்து கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கார் அதிவேகமாக வந்தது.   அதனால்தான் சாலையின் நடுவே இருந்த மரத்தில் மோதி கார் அப்பளமாக நொறுங்கியது என்று தெரிவித்துள்ளனர்.   

இந்நிலையில்,  அழகிகள் இருவரும் அருந்திய குளிர்பானத்தில் அவர்களுக்குத் தெரியாமல் அதிகம் போதை மருந்து கலந்து கொடுக்க பட்டிருப்பதாகவும் அது தெரியாமல் அவர்கள் கார் ஓட்டிச் சென்றால் விபத்து ஏற்பட்டு மரணம் நிகழ்ந்திருக்கிறது என்றும் தற்போது கேரள போலீசாருக்கு ஒரு எஸ்எம்எஸ் வந்திருக்கிறது.  எஸ்எம்எஸ் யார் அனுப்பியது என்பதை போலீசாருக்கு தெரியவில்லை.

 இதை அடுத்து அழகிகள் சென்ற அந்த ஓட்டலுக்கு சென்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது சம்பந்தப்பட்ட அன்று சிசிடிவி காட்சிகள் அனைத்தும் அழிக்கப்பட்டு இருக்கின்றன.  இதனால் மிக போலீசாருக்கு மேலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.   மேலும் அவர்கள் வந்த காரில் இரண்டு ஆண்கள் இருந்திருக்கிறார்கள். அந்த காருக்கு பின்னால் ஒரு கார் வேகமாக வந்து இருக்கிறது.    வந்த ஆடி கார் இவர்களை துரத்தி இருக்கிறது. அதனால்தான் இவர்கள் வேகமாக காரை ஓட்டிச் சென்றார்களா? இல்லை  ஓட்டலில் பார்ட்டி முடித்து விட்டு கிளம்பிய அவர்கள் கார் ரேஸ் என்பது போல் எதுவும் சொல்லிக் கொண்டு ஒருவரை ஒருவர் முந்திச் சென்று வந்து இருக்கிறார்களா என்ற சந்தேகமும் போலீசாருக்கு ஏற்பட்டிருக்கிறது. 

ச்ச்

 அழகிகள் அன்று பார்ட்டி நடத்திய போது அந்த ஓட்டலை சேர்ந்த ராய் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.   அந்த ஆடி கார் அழகிகளை வேண்டுமென்றே பாலோவ் செய்திருக்க வேண்டு.  ம் அதனால்தான் அவர்களிடம் இருந்து தப்பிக்க காரை வேகமாக ஓட்டி  இருக்கிறார்கள் என்ற கோணத்தில் விசாரித்து வருகிறார்கள்.

 நடந்த பார்ட்டியில்  அழகிகளுக்கும் நம்பர் 18 என்கிற ஹோட்டலை சேர்ந்த  ராய் என்பவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்து இருக்கிறது.  இதன் பின்னர் அந்த ஆழகிகள் கார் பின்னால் வ் அந்த  ஆடி காரில் ராய்  இருந்திருக்கிறார்.   இதனால் அவர்தான் வாக்கு வாதத்திற்கு பின்னர் அந்த அழகிகள் காரில் புறப்பட்டதும் அவர்களை துரத்திக் கொண்டு வந்திருக்கிறார் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள்.

 இதை அடுத்து நம்பர் 18 ஓட்டலின் உரிமையாளர் ராய் உள்ளிட்ட 5 ஊழியர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.   சிசிடிவி காட்சிகளின் ஏன் அழிக்கப்பட்டன என்று போலீசார் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள்.