'உட்கார சேர் தர முடியாது, வீட்லேந்து எடுத்துட்டுவா’.. பட்டியலின ஊராட்சி தலைவருக்கு அவமரியாதை
மத்தியப் பிரதேசத்தின் சத்னா மாவட்டத்தில் உள்ள அகோனா கிராமப் பஞ்சாயத்தில் பட்டியலின ஊராட்சி தலைவருக்கு அவமரியாதை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் சத்னா மாவட்டத்தில் உள்ள அகோனா கிராமப் பஞ்சாயத்தில் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று கிராம பஞ்சாயத்தில் கொடியேற்றும் விழா நடத்தப்பட்டது. அந்த விழாவிற்கு ஷ்ரத்தா சிங் செல்வதற்கு முன்னதாகவே துணை ஊராட்சித் தலைவர் தர்மேந்திர சிங் கொடியை ஏற்றிவிட்டார். பட்டியிலன தலைவரை தேசியக் கொடியை ஏற்ற விடாமல் தடுத்த இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 17-ம் தேதி நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில், பட்டியலின ஊராட்சி தலைவர் ஷ்ரத்தா சிங் கலந்து கொண்ட போது நீங்கள் உட்கார சேரை வீட்டிலிருந்து எடுத்து வாருங்கள், இல்லையெனில் தரையில் அமருங்கள் அல்லது நின்று கொண்டே இருங்கள் எனக்கூறி அவமரியதை செய்யப்பட்டார்
ஜூலை 2022-ல் ஷ்ரத்தா பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கிராமத்தில் தோராயமாக 1,600 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 50% பேர் தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், மீதமுள்ளவர்கள் பட்டியலின, பழங்கும் மற்றும் OBC சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஷ்ரத்தா சிங் வெற்றியால் ஆத்திரமடைந்த சாதிய இந்துக்கள் தொடர்ந்து சலசலப்பை உருவாக்கி வருவதாக ஷ்ரத்தா சிங் தெரிவித்தார். மேலும், தான் நடத்தப்பட்ட நடத்தையால் மிகவும் வேதனைப்பட்டதாகவும், ஆனால் இந்த பாகுபாடு மற்றும் அநீதிக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்புவதாகவும், தனது பஞ்சாயத்தில் வளர்ச்சிப் பணிகளை முன்னெடுத்துச் செல்ல போராடப் போவதாகவும் அவர் உறுதியளித்தார்.