இந்தியாவில் ஒரே நாளில் 62 ஆயிரம் பேருக்கு கொரோனா! – 1007 பேர் மரணம்

 

இந்தியாவில் ஒரே நாளில் 62 ஆயிரம் பேருக்கு கொரோனா! – 1007 பேர் மரணம்

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 62,064 பேருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது. 1007 பேர் மரணம் அடைந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 62 ஆயிரம் பேருக்கு கொரோனா! – 1007 பேர் மரணம்
தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வரத் தொடங்கினாலும், மற்ற மாநிலங்களில் வேகமாக பரவி வருவது அச்சத்தை ஏற்படுத்துகிறது. வெளிநாடுகளில் இத்தனை பேருக்கு கொரோனா, அத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்று கூறியபோது இந்தியா பாதுபாப்பாக இருந்தது. ஆனால், தற்போது நிலைமை அப்படி இல்லை. இந்தியாவில் ஒரே நாளில் 62 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 1007 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் ஒரே நாளில் 62 ஆயிரம் பேருக்கு கொரோனா! – 1007 பேர் மரணம்
இதன் மூலம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 22 லட்சத்து 15,075 ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போது 6,34,945 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 15 லட்சத்து 35,744 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 44,386 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இந்தியா தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது. 50 லட்சம் பேருடன் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அங்கு கொரோனாத் தொற்று ஒரு நாளைக்கு 55 ஆயிரம் என்ற நிலையில் உள்ளது.
இரண்டாவது இடத்தில் பிரேசில் உள்ளது. அங்கு 30 லட்சம் பேருக்கு கொரோனாத் தொற்று உள்ளது. ஒரு நாளைக்கு 23 ஆயிரம் பேருக்கு தொற்று கண்டறியப்படுகிறது.
இந்தியாவில் ஒரு நாளைக்கு 64 ஆயிரம் பேருக்கு தொற்று கண்டறியப்படுகிறது. இருப்பினும் இதைக் குறைப்பதற்கான நடவடிக்கை எடுத்தது போல தெரியவில்லை… விரைவில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவில் ஒரே நாளில் 62 ஆயிரம் பேருக்கு கொரோனா! – 1007 பேர் மரணம்
கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் முதல் இடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் பிரேசிலும், மூன்றாவது இடத்தில் மெக்சிகோவும், நான்காவது இடத்தில் இங்கிலாந்தும் உள்ளன. இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. நாம் பார்த்து பயந்த, பதறிய இத்தாலி, ஈரானை எல்லாம் இந்தியா முந்திக் கொண்டு ஐந்தாவது இடத்தில் உள்ளது. தினமும் ஆயிரக் கணக்கானவர்கள் உயிரிழப்பது தொடர்ந்தால் விரைவில் இங்கிலாந்தை முந்தும் வாய்ப்பு உள்ளது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.