கொரோனா பயம் – இறுதி சடங்கிற்கு ஒரு லட்சம் பணம் வைத்துவிட்டு கணவன் -மனைவி தற்கொலை

 

கொரோனா பயம் – இறுதி சடங்கிற்கு ஒரு லட்சம் பணம் வைத்துவிட்டு கணவன் -மனைவி தற்கொலை

திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தங்களுக்கு கொரோனா வந்து இருக்குமோ என்ற பயத்தில் இறுதிச் சடங்கிற்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன் மனைவியின் செயல் அதிர வைக்கிறது. மங்களூர் பைக்கம் பாடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த தம்பதிகள் ரமேஷ்(45), குணா(35). திருமணமாகி 21 ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை இல்லை.

கொரோனா பயம் – இறுதி சடங்கிற்கு ஒரு லட்சம் பணம் வைத்துவிட்டு கணவன் -மனைவி தற்கொலை

ஆன்லைன் மூலம் உணவு விற்பனை செய்யும் பணியை செய்து வந்துள்ளார் ரமேஷ். இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பு ரமேஷ் – குணா இருவருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு இருக்கிறது. குணா நீரிழிவு நோயாளி என்பதால் கொரோனா வந்து விட்டால் உயிர் பிழைப்பது கடினம் என்று நினைத்திருக்கிறார்கள். ஏற்கனவே குழந்தை இல்லாத விரக்தியில் இருந்த இந்த தம்பதியினர் இதில் கொரோனா வந்து வேறு அவதிப்பட வேண்டுமா என்று நினைத்து இருக்கின்றனர்.

இதையடுத்து இருவரும் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். அதன்படி ஒரு லட்சம் ரூபாய் பணத்தை வீட்டில் வைத்துவிட்டு மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமாரின் வாட்சப் எண்ணிற்கு ஒரு ஆடியோ அனுப்பி இருக்கிறார்கள். அதில், எங்களை கொரோனா தாக்கியிருக்கிறது. நாங்கள் பிழைப்பது கடினம். அதனால் நாங்கள் தற்கொலை செய்து கொள்கிறோம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த ஆடியோவை கேட்ட கமிஷனர், தற்கொலை முடிவை கைவிடும்படி கேட்டு பதில் ஆடியோ அனுப்பி இருக்கிறார்.

கொரோனா பயம் – இறுதி சடங்கிற்கு ஒரு லட்சம் பணம் வைத்துவிட்டு கணவன் -மனைவி தற்கொலை

ஆனால் அதற்கு பதில் ஏதும் வராததால் உடனே ஆடியோ அனுப்பப்பட்டவர் முகவரியை கண்டறிந்து போலீசாரை அங்கே அனுப்பி இருக்கிறார்க. ஆனால் அதற்குள் தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டு விட்டனர். இருவரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

வீட்டில் ஒரு கடிதமும் ஒரு லட்ச ரூபாய் பணமும் இருந்துள்ளது. அந்த கடிதத்தில், கொரோனாவால் நாங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக நினைக்கிறோம். அதனால் நாங்கள் தற்கொலை செய்து கொள்கிறோம். எங்கள் இறுதிச்சடங்கு செலவிற்காக ஒரு லட்சம் ரூபாய் பணம் வைத்திருக்கிறோம் என்று எழுதப்பட்டிருக்கிறது.