தேர்தல் நடைமுறையை தொடர்ந்து கேள்விக்குட்படுத்துவோம் - காங்கிரஸ்

 
congress


நாம் வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் இந்த தேர்தல் நடைமுறையை தொடர்ந்து கேள்விக்குட்படுத்துவோம் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பவாங்கா கூறியதாவது:நாம் வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் இந்த தேர்தல் நடைமுறையை தொடர்ந்து கேள்விக்குட்படுத்துவோம்.  மாணவர்களின் வினாத்தாள்கள்  கசியும்போது இயந்திரங்களையும், தேர்தல் நடைமுறைகளையும் கண்மூடித்தனமாக நம்ப முடியாது. EVM கள் மற்றும் தேர்தல் செயல்பாட்டின் வெளிப்படைத்தன்மை பற்றி நாங்கள் மீண்டும் மீண்டும் பேசுகிறோம். சிவப்பு மற்றும் பச்சை புள்ளிகள் எங்கு வைக்கப்படுகிறது என்ற பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் கொடுத்தோம்.

EVM இன் 99% பேட்டரி பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. ஹரியானாவில் வாக்களித்த பிறகு வாக்கு சதவீதம் அதிகரித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. நாக்பூரில் பாஜக தலைவரின் வாகனத்தில் EVM இயந்திரங்கள் கண்டெடுக்கப்பட்டது.ஆனால் பதில் வரவில்லை. அமைதி காப்பது ஒரு பதிலா? என கேள்வி எழுப்பியுள்ளார்.