3 வேளாண் சட்டங்கள் வாபஸ் - ஆணவம் தலை குனிந்தது என ராகுல் காந்தி கருத்து!!

 
rahul

மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட 3 பேரும் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி இன்று அறிவித்துள்ளார்.  இந்த அறிவிப்பு கடந்த ஓராண்டாக டெல்லியில் போராடி வந்த விவசாயிகளுக்கு மட்டும் அல்லாமல், வேளாண் சட்டங்களுக்கு எதிராக நிலைப்பாடு கொண்டிருந்த அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் வேளாண் சட்டங்கள் ரத்து குறித்து காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, "நாட்டுக்கு உணவளிக்கும் விவசாயிகளின் சத்தியாகிரகத்திற்கு ஆணவம் தலை குனிந்தது;  சத்தியாகிரக போராட்டத்தால் அநீதிக்கு எதிராக வெற்றி பெற்ற விவசாயிகளுக்கு வாழ்த்துகள் " என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.

The Farmers' Protests Are a Turning Point for India | Time

அதேபோல் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் , பிரதமரின் அறிவிப்பை வரவேற்கிறேன். ஆனால் இது பஞ்சாப்,  உத்தரபிரதேசம் ஆகிய மாநில தேர்தல் களை மனதில் கொண்டே பிரதமர் இந்த முடிவை எடுத்துள்ளார்ஜனநாயக முறையிலான போராட்டத்தால் பெறமுடியாத வெற்றி தேர்தல் காரணமாக நமக்கு கிடைத்துள்ளது. இருப்பினும் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களும் திரும்ப பெறப்பட்டது,  காங்கிரஸ் கட்சிக்கும், விவசாயிகளுக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று கூறியுள்ளார்.மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், விவசாய சட்டங்கள் வாபஸ் என பிரதமர் அறிவிப்பு. மக்கள் சக்தி கோட்டைக் கதவுகளை விட வலிமையானது. போராட்டத்துக்கு புது இலக்கணம் வகுத்து,ஜனநாயக மாண்புகளுக்கு வலுசேர்த்துள்ள விவசாய பெருமக்களுக்கு நன்றிகள் பல. களத்தில் உயிர்நீத்தவர்களின் தியாகம் என்றென்றும் சுடர்வீசும் என்று தெரிவித்துள்ளார். 

thiruma

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான திருமாவளவன், தாமதமான முடிவு என்றாலும் ஓராண்டாக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன் என்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.  இப்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மாநிலச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் வேளாண் சட்டத்தை திரும்பப் பெற்றது குறித்து வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.