கோடை கால பயிற்சியை தாமதப்படுத்திய இந்திய ராணுவம்…. முக்கிய நிலைகளை நோக்கி துருப்புகளை நகர்த்திய சீன ராணுவம்

கோடை கால பயிற்சியை தாமதப்படுத்திய இந்திய ராணுவம்…. முக்கிய நிலைகளை நோக்கி துருப்புகளை நகர்த்திய சீன ராணுவம்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் ஆரம்பத்தில் கோடைக்கால பயிற்சியை இந்திய ராணுவம் தாமதப்படுத்தியது. இந்த நேரத்தில் சீன ராணுவம் தனது படைகளை முக்கிய மூலோபாய நிலைகளை நோக்கி தனது துருப்புகளை நகர்த்தியதாகவும், இதன்மூலம் இதற்கு முன்னர் இந்திய படைகளால் ரோந்து சென்ற பகுதிகளுக்கான அணுகலை துண்டித்து விட்டது என அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

கோடை கால பயிற்சியை தாமதப்படுத்திய இந்திய ராணுவம்…. முக்கிய நிலைகளை நோக்கி துருப்புகளை நகர்த்திய சீன ராணுவம்

மேலும் அந்த அறிக்கையில், ராணுவம் மற்றும் திபெத் எல்லை போலீஸ் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் சப் செக்டர் நார்த்தில் கூட்டு பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். கடந்த மார்ச் மாதத்தில் ராணுவ வீரர் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டது உறுதியானதையடுத்து அந்த கூட்டு பயிற்சியை ராணுவம் ஒத்திவைத்தது. சீனாவும் தனது பயிற்சியை ஒத்திவைத்தது. ஆனால் கால்வான் பள்ளத்தாக்கு மற்றும் பாங்காங் த்சோ ஏரியுடன் பிங்கர் பகுதியில் விரைவாக மறுபடியும் வீரர்களை குவித்து இந்திய படைகளை சீன ராணுவம் ஆச்சரியப்பட வைத்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடை கால பயிற்சியை தாமதப்படுத்திய இந்திய ராணுவம்…. முக்கிய நிலைகளை நோக்கி துருப்புகளை நகர்த்திய சீன ராணுவம்

மே முதல் வாரத்தில் தொடங்கி, கிழக்கு லடாக் செக்டாரில் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துருப்புகளை சீனா நிறுத்தியது. சீன துருப்புகள் இந்திய எல்லையில் பெரிய அளவில் ஊடுருவலை செய்ய விரும்பின. ஆனால் சரியான நேரத்தில் துருப்புகளை அந்த பகுதிகளுக்கு அனுப்பி இந்திய படைகள் அவர்களின் திட்டத்தை முறியடித்தன.