பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைப்பது தொடர்பாக முதல்வர் முடிவு எடுப்பார்... டி.எஸ். சிங் தியோ தகவல்

 
டி.எஸ். சிங் தியோ

சத்தீஸ்கரில்  பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைப்பது தொடர்பாக முதல்வர் முடிவு எடுப்பார் என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டி.எஸ். சிங் தியோ தெரிவித்தார்.

சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. மத்திய அரசு அண்மையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை முறையே லிட்டருக்கு ரூ.5 மற்றும் ரூ.10 குறைத்தது. இதனையடுத்து மத்திய அரசு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தின. பா.ஜ.க. ஆட்சி நடக்கும் மாநில அரசாங்கங்கள் உடனடியாக வாட் வரியை குறைத்தன. காங்கிரஸ் ஆட்சி நடக்கும் பஞ்சாபிலும் வாட் வரி குறைக்கப்பட்டது.

பெட்ரோல் பம்ப்

இந்நிலையில் சத்தீஸ்கரில் எரிபொருள் மீதான வாட் வரியை குறைப்பது தொடர்பாக முதல்வர் விரைவில் முடிவெடுப்பார் என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார். சத்தீஸ்கர் சுகாதார துறை அமைச்சர் டி.எஸ். சிங் தியோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: நவம்பர் 22ம் தேதியன்று முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையில் மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.  அந்த கூட்டத்தில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைப்பது தொடர்பாக முதல்வர் முடிவு எடுப்பார். 

போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு அரிசி, பணம் அனுப்பிய காங்கிரஸ் மாணவர் பிரிவு… பூபேஷ் பாகல் தகவல்

நாங்கள் முன்மொழிவை அனுப்பியுள்ளோம். அதன்படி முதல்வர் அறிவிப்பார். பள்ளிகள் மீண்டும் திறப்பது தொடர்பான கேள்விக்கு, குழந்தைகளுக்கு தடுப்பூசி  போடும் வரை பள்ளிகள் திறக்கபடாது. ஆனால் பள்ளி பணியாளர்கள் 100 சதவீதம் போடப்பட்டிருப்பதை பள்ளிகள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.