2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

 
nirmala

2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் நேற்று தொடங்கியது.  நேற்று பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.  இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் 2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி 9 அமர்வுகளாக பிப்.13ஆம் தேதி வரை நடக்கிறது. 2வது பகுதி மார்ச் 10 முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய அறிவிப்புகல் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் 2025-26 நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை காலை 11 மணிக்கு  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.