அதிகாரி வீட்டு தண்ணீர்குழாயில் இருந்து கொட்டிய பணக்கட்டுகள் - அதிர்ச்சி வீடியோ

 
p

பொதுமக்களின் பயன்பாட்டுக்காக இருக்கும் பெரும்பாலான தண்ணீர் குழாய்களைத் திறந்தால் வெறும் காற்றுதான் வரும். தண்ணீரே வருவதில்லை.  ஆனால் அரசு அதிகாரிகளின் வீட்டு தண்ணீர் குழாய்களை திறந்தபோது காற்றும் வரவில்லை தண்ணீரும் வரவில்லை மாறாக கத்தை கத்தையாக பணம் கொட்டி அதிர்ச்சி அளித்திருக்கிறது. 

pp

 கர்நாடக மாநிலத்தில் அரசுத்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்கி வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்து இருப்பதாக ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு சென்ற புகாரின் அடிப்படையில் 15 அரசு அதிகாரிகளை குறிவைத்து அவர்களுக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட 68 இடங்களில் ஒரே நேரத்தில் ஊழல் தடுப்புப் பிரிவினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

 இந்த அதிரடி சோதனையில் கணக்கில் வராத தங்கம், மூட்டை மூட்டையாக பணம், சொத்து ஆவணங்களை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றி இருக்கிறார்கள். 

ppp

 விவசாயத்துறை இணை ஆணையர்  வீட்டில் மட்டும் 50 கோடி ரூபாய் மதிப்பிலான 9 கிலோ தங்கம்,  5 லட்சம் ரூபாய் 100 கோடிக்கு மேல் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.   வருவாய் ஆய்வாளர் லட்சுமி நரசிம்மா வீட்டில் மட்டும் ஐந்து கிலோ தங்கமும் 10 கிலோ வெள்ளியும் சொத்து ஆவணங்களையும் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றி இருக்கிறார்கள்.

 ஒரு பொதுப்பணித்துறை அலுவலரின் வீட்டில் நடந்ததை ரெய்டில்,  தண்ணீர் குழாயை சந்தேகத்தின்பேரில் உடைத்தபோது,  அதில் இருந்து பணக்கட்டுகள் கத்தை கத்தையாக கொண்டிருக்கின்றன.  அந்த பைப்பில் மட்டும் 40 லட்சம் பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டு அதிகாரிகள் அதிர்ந்து போயிருக்கிறார்கள்.

 ஒரே நேரத்தில் 15 அரசு அதிகாரிகள் வீட்டில் நடந்த ரெய்டினா ல்,  கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  ரெய்டின் போது தண்ணீர் குழாயில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 40 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டதும் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.