பிரபல நடிகையை பலாத்காரம் செய்ததாக யூடியூபர் ஹர்ஷா சாய் மீது புகார்
பிரபல யூடியூபர் மீது பெண் அளித்த புகாரின் பேரில் பாலியல் பலாத்காரம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரபல யூடியூபர் ஹர்ஷா சாய் கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு அவர்களுக்கு தெரியாமல் திடீரென பணம் கட்டு கட்டாக கொண்டு சென்று பணத்தை வழங்கி அவர்கள் மகிழ்ச்சியை வீடியோவாக எடுத்து யூடியூப்பில் பதிவு செய்து அதன் மூலம் அதிக வருமானம் பெற்று மிகவும் பிரபலமானார். இவரின் செயலை பார்த்த பலரும் எங்களுக்கு உதவுமாறு பல கோரிக்கைகளை முன்வைத்தனர். இந்நிலையில் ஹர்ஷா சாய் திடீரென்று யூடியூப்பில் தோன்றுவதை நிறுத்திவிட்டார். காரணம் இந்த புகழைப் பணமாக்கிக் கொண்டு சினிமாவில் நடிக்க தொடங்கினார். இந்நிலையில் அவர் மீது பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட இளம்பெண் ஒருவர் அவர் மீது தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நார்சிங்கி காவல் நிலையத்தில் வழக்கு தொடர்ந்தார். போலீசார் அந்த பெண்னின் வாக்குமூலங்களை பதிவு செய்தனர். தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி, ஹர்ஷா சாய் தன்னிடம் இருந்து இரண்டு கோடி பணம் பெற்றுக்கொண்டு தன்னை பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றி விட்டதாக இளம்பெண் குற்றம் சாட்டினார். தற்போது அந்த இளம் பெண்ணின் விவரங்களை போலீசார் ரகசியமாக வைத்துள்ள போலீசார் அந்த பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு ஹர்ஷா சாய் மீது பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.