பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்!

 
Parliament

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் இன்று தொடங்குகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. தொடர்ந்து இரண்டு முறை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த பாஜகவால் இந்த முறை பெரும்பான்மையை பெற முடியவில்லை. இருப்பினும் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாஜக தொடர்ந்து 3வது முறையாக மத்தியில் ஆட்சியை பிடித்தது.  

இந்த நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் இன்று தொடங்குகிறது. பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.